ஓம்சக்தி தீபாவளி மலர்
ஓம் சக்தி தீபாவளி மலர், பக். 418, விலை 80ரூ.
மகான்களின் பொன்மொழிகளுடன் துவங்கும் மலரில் தீபாவளிக்கேயுரிய காசி அன்னபூர்ணியின் வண்ணப்படம் அழகாக உள்ளது. கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கவிஞர்களின் கவிதைகளும் அவற்றுக்கான வண்ணப் படங்களும் அருமை. பிரபல எழுத்தாளர்களின் 14 கதைகள் உள்ளன. வயதானவர்கள் என்றால் சுவாரஸ்யம் இல்லாமலா? என தமது கதைகளில் முத்திரை பதித்திருக்கிறார்கள் கி.ரா.வும், பாக்கியம் ராமசாமியும். கொங்கணியில் பிரகாஷ் பர்யேங்கார் எழுதிய குரங்குக் குறவன் கதை சௌரியின் மொழியாக்கத்தில் சிறப்பாகத் திகழ்கிறது. நாடாளுமன்றத்துக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவற்கான யோசனையை ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தந்துள்ளார் நா. மகாலிங்கம். கேப்டன் லட்சுமியின் கடைசிப் பேட்டி உருக்கமாக அமைந்துள்ளது. காதோடுதான் நான் பேசுவேன் என எல்.ஆர். ஈஸ்வரியின் ராணி மைந்தன் பேட்டி அனுமதிப் பதிவு. ராமகிருஷ்ணர் இயக்கத்தின் முதல் மூன்று இதழ்கள் என்ற பெ.சு.மணியின் கட்டுரை, ஆன்மிக வரலாற்றை அனாயாசமாகச் சொல்கிறது. பொதுவில் பல சுவைகளில் கருத்தாழம் கொண்ட வண்ணக்கலவை இந்த மலர்.
—-
அமுதசுரபி தீபாவளி மலர், பக். 304, விலை 120ரூ.
அமுதசுரபியின் நவம்பர் மாத இதழ், தீபாவளிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஆன்மிகம், சிறுகதை, கவிதை, பயணக் கட்டுரைகள், ஆலய அறிமுகம், நினைவுக் குறிப்புகள் என கமகமக்கும் எழுத்துக் கதம்ப மாலையாக இந்த இதழ் தொகுக்கப்பட்டுள்ளது. சீதா ரவியின் குழல் அமுத்ம் கட்டுரையை உரைநடை வடியில் அமைந்துவிட்ட கவிதை என்றே சொல்லிவிடலாம். எழுத்தில் நல்ல கவி பாவனை, அவருக்குள் இருக்கும் கவியை அழகாக வெளிக்கொணர்ந்துவிட்டது அந்தக் கட்டுரை. உலகில் யாத்திருச்சிகம் என்று ஏதாவது உண்டா? எதேச்சையாக ஒரு நிகழ்வு நடத்தது எனக் கூறிவிடமுடியுமா? இறைவனே அறிவின் எல்லை நிலம் இந்திய தத்துவ இயலைத் தொடும் அருமையான ஒரிஜினல் கட்டுரை இந்திரா பார்த்தசாரதியுடையது. சிந்தனையைத் தூண்டும் ஆழ்ந்த கட்டுரையைத் தந்துள்ளார். நன்றி: தினமணி, 26/11/12.