கடைசிக்கோடு
கடைசிக்கோடு, ரமணன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.
இந்தியாவின் வரைபடம் முதன் முதலாக 1806ம் ஆண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது? அதன் மூலம் இமயத்தின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது எப்படி கண்டறியப்பட்டது? என்பது போன்ற பல தகவல்கள் நாவல் போல சுவைபட தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.
—-
உடல் உண(ர்)வு மொழி, தே. சவுந்தரராஜன், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 1, விலை 80ரூ.
எப்போது உண்ணக்கூடாது, எதை உண்ணவேண்டும், எப்படி உண்ண வேண்டும், எதனுடன் சேர்த்து உண்ணவேண்டும், உண்டபின் என்ன செய்யக்கூடாது போன்ற பல குறிப்புகள் விவரமாக விளக்கப்பட்டுள்ளன. நமக்கு என்னென்ன சிறு சிறு கோளாறுகள் நேரிடும். அதை எப்படி போக்க வேண்டும், மேலும் வராமல் எப்படி தடுக்க வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014