கண்ணதாசன் பயணங்கள்

கண்ணதாசன் பயணங்கள், கவிஞர் கண்ணதாசன், பக்.144, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-174-4.html கவியரசு கண்ணதாசன் நாடறிந்த பாடலாசிரியர் மட்டுமல்ல, சிறந்த கட்டுரையாளர் என்று இந்நூலால் அறியலாம். கவிஞர் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஆதங்கங்களையும் ஒளிவு மறைவில்லாமல் எழுதியுள்ளார். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர் 17/11/13.  

—-

 

தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, பக். 335, விலை150ரூ.

ஒரு காலத்தில் பாரதம் எவ்வாறு புகழ்பெற்றிருந்தது, எவ்வாறு வீழ்ச்சியடைந்து அடிமைப்பட்டது என்பது பற்றியும், அடைமை விலங்கொடிக்கப் பாடுபட்டுவர்களைப் பற்றியும் எடுத்துரைக்கும் நூல். மகாத்மா காந்தியடிகள், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன், பகத்சிங் உட்பட தியாகத் தலைவர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, ஜீவானந்தம் போன்றவர்களின் பட்ட துன்பங்கள், திங்ரா, பகத்சிங், உத்தம் சிங், தில்லையாடி வள்ளியம்மை, ஆசாத்போன்றோரின் தியாகம் போன்றவற்றைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. ஒவ்வொரு வீரரின் வாழ்க்கை வராற்றின் தொடக்கத்திலும் கூறிய பழைய விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம். தேசியக்கொடி, வந்தேமாதரம், தேசிய கீதம், சத்தியாகிரகம் ஆகியவற்றின் வரலாறும் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இன்றைய இளைஞர் ஒவ்வொரவரும் படிக்க வேண்டிய நல்ல நூல். நன்றி: தினமணி, 30/9/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *