கண் பேசும் வார்த்தைகள்
கண் பேசும் வார்த்தைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், 28ஏ, கிருஷ்ணன் கோயில் தெரு, ஆழ்வார் திருநகரி, சென்னை 87, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-8.html
கவிமூலத்தைப் போல திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துகுமார் தான் எழுதிய சினிமாப்பாடல்கள் உருவான சூழல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒரு பாடல் உருவாகும் சூழல், அந்தப் பாடலின் தன்மை, கவிஞர்களின் மனதில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மற்றும் சுகத்தை இந்த கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார் நா. முத்துகுமார். இவர் அடிப்படையில் கவிஞராகவும் இருப்பதால் தன் பாடல்களுக்குப் புதுக்கவிதைகளின் மெருகையும் ஏற்றிவிடுபவர். நந்தா, கஜினி, மற்றும் சந்திரமுகி போன்ற படங்களில் பாடல் எழுதிய அனுபவங்களைப் படிப்பது மிகவும் சுகமானது. நன்றி: த சன்டே இந்தியன், 25 நவம்பர் 2012.
—
சொக்கப்பனை, கவிஞர் கவிமுகில், விழிகள் பதிப்பகம், 8/எம், 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41, பக்கங்கள் 144, விலை 190ரூ.
புரியக்கூடாது என்பதற்காகவே கவிதைகள் புனையும் கவிஞர்கள் மத்தியில், கவிமுகில் போன்ற கவிஞர்கள் புரியும்படி எழுதுவது தமிழுக்குத் தேவைதான். பலருக்கு வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுத்தரும். இவருக்கு அனுபவங்கள் கவிதைகளை எழுத கற்றுத் தந்திருக்கிறது என்பதற்கு சாட்சிதான் சொக்கப்பனை கவிதைகள். சமுதாயத்தில் காணப்படும் தீய செயல்களை சொக்கப்பனையாக்கி எரித்துவிட வேண்டும் என்பதே கவிஞரின் மனதாக உள்ளது. படிப்போரையும் மாற்றுகிறது. கஷ்டம், நஷ்டம், துன்பம், இன்பம் காணும் காட்சி, பார்க்கும் பொருள், ஒட்டடைக் குச்சி, குமுதம் ஆறு வித்தியாசம் உட்பட எதையும் கவிதையாக்கும் திறம் சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம் 13,பிப்ரவரி 2013.