சொக்கப்பனை

சொக்கப்பனை, கடங்கநேரியான், வலசை பதிப்பகம், விலை 60ரூ. அறவெழுச்சிக் கவிதைகள் கவிஞர் கடங்கநேரியானின் மூன்றாவது தொகுப்பாக வெளிவந்திருக்கும் சொக்கப்பனையில் முந்தைய இரண்டு தொகுப்புகளையும் விட கவிமொழியில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். தான் வாழும் காலத்தில் நடக்கும் சமகால அரசியலை, நிகழ்வுகளை முடிந்த அளவுக்கு கவிதைகளில் படைத்திருப்பதாகச் சொல்லும் இவரது கவிதைகளில் வாழ்நிலத்தின் கூறுகள் நிரம்பிக்கிடக்கின்றன. மேகாற்றில் வேப்பம்பூ உதிரும் கிணற்றைக் கொண்டவள் நீ! அண்டங்காக்கைகள் அறிந்தே அடைகாக்கும் குயிலின் முட்டைகளை! மின்னல் கள்ளருந்திச் சென்ற மொட்டைப்பனை! இவ்வாறாக தெறிக்கும் வாழிடம் சார்ந்த காட்சிகளின் ஊடே […]

Read more

கண் பேசும் வார்த்தைகள்

கண் பேசும் வார்த்தைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், 28ஏ, கிருஷ்ணன் கோயில் தெரு, ஆழ்வார் திருநகரி, சென்னை 87, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-8.html கவிமூலத்தைப் போல திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துகுமார் தான் எழுதிய சினிமாப்பாடல்கள் உருவான சூழல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒரு பாடல் உருவாகும் சூழல், அந்தப் பாடலின் தன்மை, கவிஞர்களின் மனதில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மற்றும் சுகத்தை இந்த கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார் நா. முத்துகுமார். இவர் அடிப்படையில் […]

Read more