கனவின் பலன்கள்

கனவின் பலன்கள், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 33ரூ.

கனவின் பலன்களைக் கூறுகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். கனவில் கழுதையைக் கண்டால், கொஞ்சம் கொஞ்சமாக துன்பம் நீங்கும். யானையைக் கண்டால் அதிர்ஷ்டம். புலிகள், சிங்கங்கள், கரடிகள் முதலிய கொடிய மிருகங்களைக் கண்டால் பலவான்களுடன் விரோதம் ஏற்படும். சிட்டுக்குருவி, வாத்து ஆகியவற்றைக் கண்டால் நல்லது நடக்கும். இப்படி பல பலன்களை சொல்கிறார் வாரியார் சுவாமிகள். புராணங்களிலும் இலக்கியங்களிலும் கனவு கண்டவர்கள் பற்றியும், அவர்கள் கண்ட கனவுக்கான பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.  

—-

ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை, நர்மதா பதிப்பகம், விலை 70ரூ.

ரேஷன் கார்டு பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? வீடு வாங்குவதற்கான சட்ட விதிகள் என்ன? கலப்புத் திருமண நிதி உதவி பெறுவது எப்படி? இவ்வாறு நாம் அறிந்து கொள்ள வேண்டிய 69 விஷயங்களை தெளிவாக இப்புத்தகத்தில் கூறுகிறார் சட்ட நிபுணர் எஸ். சேஷாச்சலம். பயனுள்ள கையேடு. நன்றி: தினத்தந்தி, 20/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *