கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் வெளியீடு, காமராஜர் தெரு, பண்ருட்டி 607106, பக். 272, விலை 300ரூ.

குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 112 தாவரங்கள், கபிலர் தொகுத்து வழங்கயி, 102 பூக்கள் ஆகியவற்றை இலக்கியப் புலமையோடும், அறிவியலின் அடிப்படையில் தாவரவியல் பெயரீட்டு முறையிலும் அணுகி, மிக அருமையானதொரு பணியினைத் தாவரத் தகவல் மையம் செய்துள்ளது. குறிஞ்சிப்பாட்டில் உள்ள தாவரங்கள் பட்டியல், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்கணக்கு போன்ற இலக்கியங்களில் இடம் பெறும் தாவரம் எனப் பட்டியலிட்டு அதன் வகைப்பாடு, தாவர ஒளிபடம் போன்றவை, முறையாக தொகுக்கப்பட்டுள்ளன. கபிலர் பற்றியும், கபிலர் குன்று பற்றியும் செய்திகள் அடங்கிய இந்நூலின் இறுதியில், தாவரங்களின் (‘ஓண் செங்காந்தள்’ துவங்கி ‘வேய்’ முடிய 112)படங்கள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்கால தாவரவியல் ஆய்வாளர்களுக்கு, பெரிதும் பயன்படக்கூடிய பயனுள்ள நூல். – பின்னலூரான். நன்றி: தினமலர், 12/5/2013.  

—-

 

மகாகவி ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் கிளியோபாட்ராவும், நா. ரமணி, நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600098, பக். 200, விலை 150ரூ.

எதிர்பாராத திருப்பங்களும், திகில்களும் நிறைந்த இந்தக் கதை வாசகர் உள்ளத்தை உலுக்கும். ரோமாப் பேரரசின் முப்பெரும் தூண்களில் ஒருவர் ஆண்டனி, அவர், கிளியோபாட்ராவின் விளையாட்டுப் பொம்மையாக இருப்பதை ஷேக்ஸ்பியர் வர்ணிக்கிறார். பூட்டிய கவசம், புடைக்க விரியும் தளபதி ஆண்டனியின் நெஞ்சு, கிளியோபாட்ராவின் காமத்துக்கு காற்று வீசும் உலையாகிப் போனது எப்படி, என்பதுதான் கதை. ஷேக்ஸ்பியர் செய்திருக்கும் நாகாசுவேலைகளை அப்படியே இனிய தமிழில் வடிக்கிறார். உதாரணமாக AGE CANNOT WITHR HER. NOR CUSTOM STEAL HER INFINITE VARIETY என்பதை வயது அவரைச் சருகாக்கி விடாது. என்னதான் தினம் தினம் அவரை அனுபவித்தாலும் நாளும் புதிதாகக் காதல் செய்யும் அவர் திகட்டிப் போக மாட்டார் என்று அழகாக மொழி பெயர்த்திருக்கிறார். மூல நூலின் சுவை குன்றாமல் மொழிபெயர்த்த பாங்கு அருமை. -எஸ். குரு. நன்றி: தினமலர், 12/5/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *