எழுந்து நில் என் தோழா
எழுந்து நில் என் தோழா (கவிதைப் பூக்கள்), மாயாண்டி சந்திர சேகர், மணிமேகலைப் பிரசுரம், 7(4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 162, விலை 70ரூ.
கவிதை எழுத, கவிதை உணர்வு வேண்டும். அந்த உணர்வு இவருக்கு இயல்பாக வரப்பெற்றுள்ளதால் இந்த நூல் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பழைய பகையை தீர்த்துக்கொண்டது புகையும் சிகரெட் போன்ற வரிகள் மனதில் தைக்கின்றன. -எஸ். திருமலை. நன்றி: தினமலர், 23/10/2011.
—-
அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை-2012, ஹீலர் பாஸ்கர், ப்ரவாகம் பப்ளிகேஷன்ஸ், 23/31, ராமலிங்கசாமி தெரு, அம்மாப்பேட்டை, சேலம் 636003, விலை 200ரூ.
அலோபதி, ஆயுர்வேதிக், அக்குபஞ்சர் என்று உலகில் எத்தனையோ மருத்தவம் உள்ளன. ஆனால் இந்த அனாடமிக் மருத்துவம் முற்றிலும் வித்தியாசமானது. இதில் மருந்தோ, மருத்துவரோ தேவையில்லை என்கிறார் இந்நூலாசிரியர். பொதுவாக நோய் இரண்டு வகையானது. ஒன்று நம் உடலுக்குள் தானாகத் தோன்றுவது. அதாவது சர்க்கரை நோய், தைராய்டு, ரத்த அழுத்தம், ஸைனஸ், ஆஸ்த்துமா, கேன்ஸர் என்று நூற்றுக்கணக்கில் உள்ளன. இரண்டாவது வெளியில் இருந்து வருபவை. அதாவது விபத்துக்கள் மூலம் ஏற்படுகிறவை. இந்த வகையான நோய்க்கு, இந்த அனாடமிக் சிகிச்சை பலன் அளிக்காது. அதற்கு அலோபதியையோ, மற்ற மருத்துவத்தையோ உடனடியாக அணுக வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர். இதில், முதல் வகையான நோய்கள்தான் உலகில் 95 சதவிகிதம் உள்ளன என்று கூறும் ஆசிரியர், இவை அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு திவரம் நமக்குள் உள்ளது. அந்தத் திரவம் எது? அதை சுரக்கும் சுரப்பியின் பெயர் என்ன? அது எப்படி அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது? அதை எப்படிச் சுரக்க வைப்பது என்ற விபரங்களை நாம் தெரிந்து கொண்டால், நமக்கு நாமே வைத்தியராகி, நோய்நொடி அண்டாத வாழ்க்கையை வாழலாம் என்கிறார். அந்த விபரங்களை இந்நூலில் மிக விளக்கமாக விவரித்துள்ளார். தவிர, இது உலகில் அனைவருக்கும் எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக டௌன்லோடு செய்து கொள்ள www/anatomictheerapy.org என்ற வெப்சைட் முகவரியைம் தந்துள்ளார். இது சி.டி.யாகவும் கிடைக்கிறது. -பரக்கத். நன்றி:துக்ளக் 15/5/2013.