புறநானூறும் திருக்குறளும்
புறநானூறும் திருக்குறளும், முனைவர் சரளா ராசகோபாலன், ஒளிப்பதிப்பகம், எண் 4(63), டாக்டர் ரங்கா சாலை, சென்னை 6000018, பக். 232, விலை 150ரூ.
சிறந்த புலமையும் எழுத்தாற்றலும் உடைய, நூலாசிரியரின் 74வது நூல் இது. இந்நூலுள் புறநானூறு அறிமுகம், திருக்குறள் அறிமுகம், தொடர் ஒப்புமை, பொருள் ஒப்புமை, ஒற்றுமை, வேற்றுமைக் கூறுகள் என ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன. இரு நூல்களையும் பலமுறை ஆழ்ந்து கற்று, ஒப்புமைகளைக் கண்டு ஆராந்து, நுட்பமாக இந்நூலை ஆக்கியுள்ளார் ஆசிரியர். சொல்லாய்வுகளும் இடம் பெற்றுள்ளன. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் எனும் திருக்குறளும் மற்றும் பல குறட்பாக்களும், கற்பின் திறத்தைப் பாராட்டும் வகையிலேயே புறநானூறும் பல இடங்களில் பாராட்டியுள்ளது. உயிரினும் சிறந்தன்று நானோ காணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று எனும் அடிகள் புறநானூற்றில் காணப்படுகின்றன. பகுத்துண்டு வாழ்தலைச் சிறப்பிக்கும் திருக்குறளைப் போலவே, புறநானூறும் தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் போன்ற வரிகள் சிறப்பித்துள்ளது. புறநானூற்றுத் தொடர்களே, திருக்குறளுக்கு அடிப்படையாகலாம். கல்வியின் சிறப்பைப் புறநானூறு எப்படியெல்லாம் போற்றுகிறதோ, தமிழர் அனைவரும் படித்து உணர்ந்து இன்புறத்தக்க நூல் இது. -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 23/10/2011.
—-
திருக்குறள் அறத்துப்பால் எளிய, விரிவான விளக்கம், (புதிய நடையில் பா உரையும் தொகுப்பும்), வி. பத்மநாபன், மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, சென்னை 17, பக். 140, விலை 60ரூ.
தீயவை தீய பயத்தால் தீயவை தீயினும் அஞ்சப் படும் என்ற குறளுக்கு, ஆசிரியர் விளக்கமும் குறள் மூலமாகவோ, தீயவை தப்பாமல் தீமை புரிவதால் தீயினும(து) அஞ்சப்படும். இப்படி, 380 குறட்பாக்களுக்கு சுவையான புதுமை விளக்கம். -எஸ். திருமலை. நன்றி: தினமலர், 23/10/2011.