திருவடி மாலை
திருவடி மாலை, எஸ். ஆர். ஜி. சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன்பேட்டை, சென்னை 6000091, பக். 240, விலை 75ரூ.
வைணவத்தலங்கள் 108 என்றும் அதில் 106 திருத்தலங்கள் சென்று வழிபட இயலும். மற்ற இருஇடங்களான திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் (திருப்பரமபதம்), இவ்வுடலுடன் சென்று சேவிக்க இயலாது என்றும் கூறுவர். 108 திவ்ய தேசங்களுக்கும், ஆன்மிக அன்பர்கள் சென்று சேவிக்க வசதியாக, திருப்பதிகளில் அருள் பாலிக்கும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தியை, உற்சவ மூர்த்திகள் திருநாமங்களும், அவ்விடச்சிறப்பு குறித்த வெண்பாவும், அதற்குரிய விளக்கவுரையும், யாத்திரை சென்று வந்ததற்கான குறிப்புகள் எழுதிக் கொள்ள வசதிகளும் இந்நூலில் காணலாம். சில வெண்பாக்களில் உள்ள இலக்கணப் பிழைகள், அடுத்த பதிப்பில் நீக்கல் நலம். (பக். 76, 142) -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 23/10/2011.
—-
பேராசிரியர் இரா, மோகனின் படைப்புலகம், நிர்மலா மோகன், பேராசிரியர் தூ. சேதுபாண்டியன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 290, விலை 100ரூ.
இலக்கிய இணையர் பேராசிரியர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன் மணிவிழா வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதுவரை இவரது நூல்கள், 82 வெளிவந்துள்ளன. பேராசிரியரின் ஒட்டுமொத்த இலக்கிய செயல்பாடுகளை அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். -எஸ்.திருமலை. நன்றி: தினமலர், 23/10/2011.