கம்பன் தமிழும் கணினித் தமிழும்
கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 216, விலை 150ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024227.html பெண் கவிகள், புதுக்கவிதை, சிறுகதை, எழுத்தாளர்கள் என, இலக்கிய சுற்றத்தை விமர்சித்தும், ஆய்வு செய்தும் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தமிழில் பெண் கவிகள் முதல், கணினியில் வளரும் தமிழ்வரை, மொத்தம் 16 கட்டுரைகள், சீரான நேர்கோட்டில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, கதை எழுதுவது, ஈட்டி எறிதல் போல இருக்க வேண்டும். ஈட்டி, காற்றைக் கிழித்து வெகு தூரம் போகவும் வேண்டும். நுனியில் குத்தி, நிமிர்ந்து நிற்க செய்யவும் வேண்டும்’ என்கிறார் ஆசிரியர். திருக்குறளில், தமிழும், தமிழகமும் ஏன் இல்லை என்று வினா தொடுத்து, அதற்கு பதிலாக, ‘உலக மனிதர் அனைவருக்கும் உள்ள பிரச்னைகள்தான், தமிழனுக்கும். இதை புரிந்து கொண்டால் உலகமே உன்னை ஏற்றுக்கொள்ளும் அதற்குத்தான்!’ என்கிறார். கண்ணதாசன், பாரதியின் பாட்டுக்கு ஏன் இரண்டாம் பரிசு, புதுக்கவிதை குறித்த விமர்சனம் உள்ளிட்ட பல கட்டுரைகள், வாசகனை சிந்திக்க தூண்டும். விவாதத்திற்கும் ஏற்ற நூல்! -சி. கலாதம்பி. நன்றி: தினமலர்,20/12/2015.