கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்)
கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்), பெரும்புலவர் கோ. வில்வபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 1320, விலை 900ரூ.
கம்ப ராமாயணம், ஆறு காண்டங்களை உடையது. இரண்டாவதான, அயோத்தியா காண்டத்தின் பாடல்களுக்கு, தெளிவுரையும், விளக்க உரையும் கொண்டது இந்த நூல். நூலின் முதலில் 12 படலங்களுக்கும் உரிய கதைச் சுருக்கம் உள்ளது. அது படிப்போருக்கு தூண்டுகோலாக அமையும். கெடுத்தொழிற்தனை என துவங்கும் பாடலுக்கு, உரையாசிரியர் தரும் அருமையான விளக்கம், அவரது புலமைத் திறனுக்கு எடுத்துக்காட்டு. (பக். 156 -161). கிள்ளையொடு பூவை அழுத பாடலுக்கு, ஒருசார் அஃறிணையோடு ஒத்த உருவறியாப் பிள்ளைகளாகிய இளங்குழந்தைகளும் அழுதன என்று புதிய உரை தருவதும் (பக். 371), வந்தெதிரே தொழுதானை என்ற பாடலுக்குப் பல பெரியோர்கள் பலவிதமாக உரை செய்திருக்க, இந்த உரையாசிரியர் தெள்ளத்தெளிவாக, குகன் முன் பரதனே அடிவிழுந்து வணங்கினான் என்று கூறுவதும் (பக். 1102) , தாயுரை கொண்டு பாடலுக்கு, பரதரனின் உயர்ந்த குணமே பாராட்டப்பட்டுள்ளது என்றும், பரதனிலும் ராமனைத் தாழ்த்துவதாக ஆகாது என நயவுரை கூறுவதும் (பக். 1108), நூலாசிரியரின் ஆய்வுத் திறனுக்கு, சான்றுகள். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 23/8/2015.