கரைந்த நிழல்கள்
கரைந்த நிழல்கள், அசோகமித்திரன், நந்றிணை பதிப்பகம், பக். 159, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-1.html
மகத்தான நாவல் வரிசையிலும், அசோகமித்திரனின் மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்றான இந்த நாவல் வெளிவந்துள்ளது. சினிமா தொழிலில் தொடர்புள்ளவர்கள் பற்றிய நாவல் இது. இருந்தாலும் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் லௌதீக, லோகாயதமான வாழ்க்கை சம்வங்களையே முன் வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. நா.பா. நடத்திய தீபம் இலக்கிய மாத இதழில் தொடராக வெளிவந்த, இந்த நாவல் பரவலாக, இலக்கிய அன்பர்களால் அதிகம் பேசப்பட்டது ஆல்பர்ட் பிராங்களின் என்பவர், இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அமைதியானவர் அசோகமித்திரன். அவர் படைப்புகளும் ஆரவாரமின்றி அழகிய தடாகத்தை ஞாபகப்படுத்தக்கூடியவை. -ஜனகன்.
டாக்டர் புரட்சித் தலைவி சொன்ன குட்டிக்கதைகள் 100, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 110. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-0.html
தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசிய உரைகளில் சொன்ன 100 குட்டிக்கதைகளை தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர் சபீதா ஜோசப். முதல் கதையின் தலைப்பு அம்மா என்றால் அன்பு. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் தவறாது படித்து, பயன்பெற வசதியாக தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பான செயலாகும்.
—-
வாழ்க்கைக்கு வழிகாட்டும் ராமாயணம், தர்மசக்தி, 59, ஐயா முதலி தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 60ரூ.
ராமாயணம் என்பது மனித வாழ்வின் உயரிய அம்சத்தைக் காட்டுவிது என்ற கருத்துக்களை தாங்கி வந்திருக்கும் நூல். பல்வேறு கட்டுரைகள், இதில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 30/6/13.