களவுபோன என் கடவுளும் காணாமல் போன காதலியும்
களவுபோன என் கடவுளும் காணாமல் போன காதலியும், ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை 621310, விலை 300ரூ.
தடய அறிவியல் அறிஞரான பேராசிரியர் ப. சந்திரசேகரன் தடயவியல் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் எழுதியுள்ள நாவல். தடயவியல் ஆய்வு போலவே அமைந்துள்ளது. வித்தியாசமான முயற்சி, வாசிக்கவும், வித்தியாசமான அனுபவம். நன்றி: இந்தியா டுடே, 7/8/2013.
—-
பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே, துளசி. இராமசாமி, விழிகள், வேளச்சேரி, சென்னை 42, பக். 888, விலை 700ரூ.
பழந்தமிழ் இலக்கிய நூல்களைத் தொகை நூல்கள் என்றே வழங்குவர். தொகை நூற் பாடல்கள் அனைத்தும் தனித் தனிப் பாடல்கள். தொகை நூல்கள் எங்கிருந்து, எதிலிருந்து தொகுக்கப்பட்டன என்ற வினாவை எழுப்பி முன்புள்ள நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விடையும் தந்துள்ளார் தமிழறிஞர் கா. சிவத்தம்பி. தனித்தனிப் பாடல்களின் தொகுப்பாக இருந்தவை அடிவறையறையால் குறுந்தொகை, நடுத்தொகை, நெடுத்தொகை, புறத்தொகை என வகைப்படுத்தப்பட்டன. இத்தகைய நூல்களே பழந்தமிழ் இலக்கியங்களாகும். தொகை நூற் பாடல்களான பழந்தமிழ் இலக்கியங்களுள் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என பல பாடல்வகைகள் உள்ளன. இதில் பாணர்கள் உடைய இடைச்செருகல் பாடல்கள் மிக மிகக் குறைவு. புலவர்கள்தான் அதிக அளவில் இடைசசெருகல் பாடல்களைப் பாடியுள்ளனர். வாய்மொழிப் பாடல்களாக நாட்டுப்புறப் பாடல்களாக இருந்தவற்றை ஒன்று சேர்த்து தொகுத்த பெருமை சமண முனிவர்களையே சாரும். இத்தொகுப்புகளிலிருந்து பாடல்களை எடுத்தும், புதிதாகப் பாடல்களை எழுதிச் சேர்த்தும் இறையனார் அகப்பொரளுரை காலத்தில் சைதிகச் சமயத்தார் இன்றைக்குள்ள தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு சமயத்தார் தொகுப்புகளிலும் திணை, துறை போன்றவை இடம்பெறவில்லை. இறையனார் அகப்பொருளுரையும், சங்க நூல்களும், தொகை நூல்களின் முதல் பதிப்பு வரலாறு, எழுத்துப் பண்பாட்டில் தொகை நூல்கள், பழந்தமிழ்ப் பாடல்கள், வீரநிலைப் பாடல்களா? அவைப் பாடப்பட்டவையா? எழுதப்பட்டவையா? பாணரும் புலவரும், முதலிய தலைப்புகளில் தான் எடுத்துக் கொண்ட கருதுகோளுக்கு ஏற்ப தகுந்த தரவுகளோடு பழந்தமிழ் நூல்கள் நாட்டுப்புறப் பாடல்கள்தான் என்பதை நுணுகி ஆராய்ந்து, தீர்க்கமான முடிவை முன்வைத்துள்ளார் நூலாசிரியர். சிறந்ததொரு ஆய்வுத் தொகுப்பு. நன்றி; தினமணி, 19/11/2012.