குத்தகை ஒப்பந்தம் 999

குத்தகை ஒப்பந்தம் 999, ஜெ. ஜாக்குலின் மேரிராஜ், ஆதாம் ஏவாள் பதிப்பகம், நாகர்கோவில் 1, விலை 100ரூ.

அணை எழுந்ததும், மடிந்து வாடிய மனித சமூகமும் எழுந்தது என்பதற்கு ஏற்ப உருவான முல்லைப் பெரியாறு அணையை பலவீனமாக உள்ளது என கூறி அதை உடைத்து புதிய அணை கட்டும் கருத்தை கேரள மக்கள் மனதில் ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான சூழ்ச்சிகள் மற்றும் காரணிகளை ஆதாரபூர்வமாக விளக்கி கூறும் நூல். அணையை கட்டுவதற்கு பொன்னிகுயிக் மேற்கொண்ட முயற்சிகள் வியக்க வைக்கின்றன.  

—-

 

ஜுபிடர் பிக்சர்ஸ், விஜயா பப்ளிகேஷன்ஸ், விஜயா கார்டன்ஸ், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 150ரூ.

தமிழில் மிகச்சிறந்த வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் ஜுபிடர் பிக்சர்ஸ். எம். சோமசுந்தரம், எஸ்.கே. மொகிதீன் ஆயியோர் இரட்டையர்போல் செயல்பட்டு இந்த பட நிறுவனத்தின் மூலம் சிறந்த படங்களை தமிழகத்திற்கு வழங்கினார்கள். தமிழில் வெளிவந்த முதல் சமூகப்படம் மேனகா (1935), ஜுபிடர் தயாரிப்பு. இந்தப் படத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமானார். வசனத்திலும், நடிப்பிலும் புரட்சி செய்த கண்ணகி, இவர்கள் எடுத்த படம். அண்ணாவின் கதையான வேலைக்காரியை மிகச் சிறந்த படமாக உருவாக்கியவர்கள் இவர்கள்தான். பெரும் சாதனைகளைப் புரிந்த ஜுபிடர், பிற்காலத்தில் சில சோதனைகளை அனுபவிக்க நேர்ந்தது. ஜுபிடரின் முழு வரலாற்றையும், மொகிதீன் மகனான எஸ்.கே. ஹபிபுல்லா ஒரு நாவலைப்போல விறுவிறுப்பாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார். ஜுபிடரின் தோல்விப்படங்கள் பற்றியும், அவர் வெளிப்படையாகக் கூறுகிறார். இப்புத்தகம் மூலமாக, தமிழ்ப்பட உலகின் முதலாவது பொற்காலத்தை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. சினிமா ரசிகர்களுக்கு இது அற்புதமான கையேடு.  

—-

 

ஆழ்வார்கள் அருள்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ.

ஆழ்வார்களின் அருந்தமிழ் பாடல்கள் படிப்போர் உள்ளத்தை கவரும் பண்புடையது. அத்தகைய ஆழ்வார்கள் பன்னிருவரில் திருப்பாண் ஆழ்வார், மதுரகவியாழ்வார் தவிர ஏனைய பத்து பக்தர்கள் பற்றியும், அவர்கள் இயற்றிய பாடல்களின் அருமை, பெருமையை விளக்கியும் கூறுகிறார் சாமி. சிதம்பரனார். நன்றி: தினதந்தி, 25/9/2013

Leave a Reply

Your email address will not be published.