இராமாயணத் துமணிகள்
இராமாயணத் துமணிகள், ஆ.கிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 1032, விலை 495ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-7.html
இந்த நூலில் வால்மீகி ராமாயணத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு, கதாபாத்திரங்களை விவரிக்கிறார் நூலாசிரியர். ராமாயண காவியத்தில் சுடர்விடும் தூமணிகளான ராமன், சீதை, லட்சுமணன், அனுமான், ராவணன், கும்பகர்ணன், தசரதன், கைகேயி, பரதன், குகன் சுக்ரீவன், விபீஷணன் என ராமாயண காவியத்தின் மிக முக்கியமான 12 கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு அந்தந்தப் பாத்திரங்களின் வழியே ராமாயணத்தை அணுகியுள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டி ஆராய்ச்சி, பாணியில் செல்லாமல், முக்கியக் காட்சிகளில் இந்தக் கதாபாத்திரங்கள் எப்படி கதைக்கு வலுசேர்க்கிறார்கள். கதாபாத்திரம் அந்தக் காட்சியில் வெளிப்படுத்தும் தன்மை எவை என விவரிக்கிறார். உதாரணமாக, ராமனைப் பற்றி வெளிப்படுத்தும்போது, கோபத்தை வென்றவர் எனில், கோபமே இல்லாதவர் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளக்கூடாது, நியாயமாகக் கோபம் ஏற்பட நேரிட்டால், கோபத்தைக் காண்பிக்க வேண்டும். ஆனால் அதை உடனுக்குடன் அடக்கிக் கொள்ள வேண்டும். ராமன் அப்படிப்பட்டவர் எனக் காட்டுகிறார். தெய்வச் செயல், விதி என்பதெல்லாம் மதிக்குப் பின்னர்தான் என்பது லட்சுமணனின் நம்பிக்கை என அவனை வெளிப்படுத்துகிறார். சூடாமணி தலையில் அணியும் ஆபரணம். ராமனைத் தெய்வமாகக் கொண்ட சீதை, ராமனை நேரில் வணங்க முடியாத நிலையில், தனது தலையில் ஆபரணமாகக் கொண்ட சூடாமணியை சமர்ப்பிப்பதன் மூலம் தலை வணங்குபவளாகத் தன்னை பாவித்துக் கொள்கிறாள். சூடாமணியை அடையாளமாகத் தேர்ந்தெடுத்த சீதைக்கு ஈடு இணை யார்? என்று சீதையின் கதாபாத்திரச் சிறப்பை வெளிப்படுத்துகிறார். கதையை அப்படியே கொடுத்துவிட்டு அடைப்புக் குறிக்குள் கதாபாத்திரத்தின் தன்மைகளை அலசுவது பாராட்டத்தக்கது.இது கதை ஓட்டத்தில் குறுக்கிடாத தன்மையைப் படிப்பவருக்கு ஏற்படுத்துகிறது. நன்றி; தினமணி, 11/11/2013.
—-
பக்தி ஸுதா, கே. நாராயணன், ராமபக்தாஸ், எஸ் 17 பி, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை 600078, பக். 276, விலை 70ரூ.
இந்தத் தொகுப்பு பல ஸ்லோக மலர்களால் தொகுக்கப்பட்ட ஒரு மாலை. இறைவனிடத்தில் நமது மனதை லயிக்கச் செய்ய, கோவில் சென்று வழிபட அல்லது இறைவனுடைய திருவுருவப் படங்களை பக்தியுடன் பூஜித்து, பிரார்த்தனை செய்ய இந்த ஸ்லோகங்களின் தொகுப்பு உதவும். -எஸ். குரு. நன்றி:தினமலர், 10/11/2013.