காதல் நதி

காதல் நதி, லோகம் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

தலைப்புக்கு ஏற்ப, காதல் கவிதைகள் நிறைந்த புத்தகம். மாதிரிக்கு ஒன்று, இளமையிற் கல் என்பதை உன்னைக் கண்டதும் இளமையில் காதல் எனத் திருத்திக் கெண்டேன். படங்கள், அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.  

—-

நூற்றாண்டு நாயகர் பேரறிஞர் அண்ணா, எம்.எஸ்.தியாகராஜன், தமிழ்ச்சோலை பதிப்பகம், சென்னை, விலை 215ரூ.

தனது அறிவாற்றலாலும் அயராது நூல் வாசிப்பாலும், அரசியல் சாணக்கியத்தனத்தாலும், சட்டசபை, பாராளுமன்றத்தில் நுட்பமான உரைகளால், சர்வ கட்சித் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக உயர்ந்தவர் பேரறிஞர் அண்ணா. இவருடைய வாழ்வில் நடந்து பல சுவையான தகவல்களை நூல் ஆசிரியர் தொகுத்து உள்ளார். வண்ண புகைப்படங்களுடன் அண்ணாவை பற்றி இளையதலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 23/4/2014.  

—-

இயற்கை மருத்துவத்தில் மகப்பேறு, ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 75ரூ.

குடும்ப வாழ்க்கையில் மகப்பேறு அடையாத பெண்கள் அடையும் வேதனைகள் ஏராளம். அப்படி மகப்பேறு கொண்ட பெண்கள் தங்களையும், பெறப்போகும் குழந்தையையும் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை பல ஆண்டுகள் ஆய்வு செய்து, டாக்டர் க. திருத்தணிகாசலம் இந்த நூலை எழுதியுள்ளார். பெண்களுக்கு பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.

Leave a Reply

Your email address will not be published.