காந்தியக்கனவு

காந்தியக்கனவு, கஸ்தூரிபா காந்திர டிரஸ்ட், 11, காளிதாஸ் ரோடு, ராமநகர், கோயமுத்தூர் 9, பக். 56, டெம்மி விலை 100ரூ.

32 அற்புதமான காந்தியச் சிந்தனைகதைகள். முக்கியமாக மதுவிலக்கை வலியுறுத்தும் கதைகள், அட்டை அருமை. ஒரு நிமிடம் வாசகர்களே ஒரு கூப்பன் இணைத்து நூலைப் பற்றிய கருத்தை கேட்டு, அதை அனுப்புவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு புதுமை. விலை அதிகம்.  

—-

 

இணைப்புகள், என். நடராஜன், ஸ்ரீமாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 176, விலை 60ரூ.

நம் வாழ்க்கையில், வெற்றிகளைக் குவிக்கு வழி சொல்லும் கதைகள். புதிய விளக்கத்துடன், 32 பழைய கதைகள் சிறுவர்களைச் சிந்திக்க வைக்கும். -எஸ். திருமலை. நன்றி: தினமலர், 6/11/2011.  

—-

 

சிலப்பதிகார ஆராய்ச்சி, வெ.சு. சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், சென்னை 78, பக். 184, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-3.html

சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி இந்நூல். தமிழில் இலக்கிய நூல்கள் எத்தனையோ இருந்தாலும் தமிழன்னைக்கு அணி செய்பவை ஐந்து பெருங்காப்பியங்கள். அவற்றில் சிலப்பதிகாரமும் ஒன்று. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் பல காணப்படுவதாகக் கூறும் நூலாசிரியர் சிலப்பதிகாரம் குறித்து காலங்காலமாகய் கூறப்பட்டுவரும் செய்திகளைக் கட்டுடைத்துப் பார்த்து ஆழமான விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார். பெருங்காப்பியமா? சிறுகாப்பியமா? கோவலன் எத்தனை பேர் என்பது பற்றிய முரணான செய்திகள், முலையறுக்கும் வழக்கம், சிலப்பதிகாரம் கடைச்சங்கக் காலத்திய நூலா? கண்ணகியும் திருச்செங்கோடும், சிலப்பதிகார ஆசிரியர் என்பன உள்ளிட்ட 39 தலைப்புகளின் கீழ் தனது நியாயமான வாதங்களை முன் வைத்து கட்டுரைகளைத் தீட்டியுள்ளார் நூலாசிரியர். சிலப்பதிகாரம் குறித்து பொதுவாக நிலவிவரும் கருத்துக்களுக்கு எதிர்மாறாக தனது முடிவுகளை ஆணித்தரமாகவும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். தொடர் விவாதத்துக்கும், ஆராய்ச்சிக்கும் வித்திடும்வகையில் படைக்கப்பட்டுள்ள முற்றிலும் மாறுபட்ட சிலப்பதிகார ஆராய்ச்சி நூல் இது. நன்றி: தினமணி, 1/7/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *