காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், அசோகமித்திரன், தொகுப்பு யுகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 366, விலை 300ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-368-6.html சில கதைகளைக் கேட்கும்போதும், வாசிக்கும்போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு. தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. எலி என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தரத்தை சில கதைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாக அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்கு கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. நன்றி: தினமணி, 13/4/2015.