காமராஜ் புதிரா புதையலா
காமராஜ் புதிரா புதையலா, காமராஜ் விழிப்புணர்வு மையம், விலை 70ரூ.
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வைத்து வரலாறு எழுதுவதென்பது, வரலாற்றை வாசகர் தெரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, அந்த வரலாற்றிலிருந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை கற்றுக் கொள்வதற்கும்தான். அந்த எதிர்பார்ப்பில்தான் நூலாசிரியர் எஸ்.பி. கணேசன் இந்நூலை தொகுத்து அளித்திருக்கிறார். வரலாற்று பதிப்பு என்பதால் கூட்டி, குறைத்து என்றில்லாமல் மிக கவனத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. செய்தி சேகரிப்பை வகைப்படுத்திய விதம் நேர்த்தியாக இருக்கிறது. வாசகரின் செய்தித் தேடலுக்குத் தகுந்தாற்போல் தலைப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த நூலை வாசித்தால், நம் மனதில் ஓர் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தி காமராஜ் புதிரா? புதையலா? என சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.
—-
ஏன் இந்த இடைவெளி?, வானதி பதிப்பகம், விலை 90ரூ.
சமீப காலமாக முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் முதியவர்கள் வெவ்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். முதுமையில் முதியோர்களுக்கு ஏற்படும் குடும்பம் மற்றும் நிதி சார்ந்த பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் இந்த நூலில் பிரபல முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராஜன் எழுதியுள்ளார். முதியோர் மட்டுமல்ல, இளைஞர்களும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.