காலத்தின் குரல்
காலத்தின் குரல், ஆவாரம்பூ, 10, மேலப்பாட்ட நயினார்புரம், கல்லிடைக்குறிச்சி 627416, விலை 50ரூ.
கவிஞராக, சிறுகதையாளராக, கட்டுரையாளராக என பன்முகத்தில் சிறந்த தி.க.சி. விமர்சகராக இருந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்த நூலில் பல எழுத்தாளர்கள் பற்றிய அவரது வெளிப்படையான கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. தொகுத்தவர் வே. முத்துக்குமார்.
—-
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள், சுவாமி தன்மயானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணமடம், மைலாப்பூர், சென்னை 4, விலை – முதல் பாகம் ரூ.120, மற்ற பாகங்கள் தலா ரூ. 110.
ஆன்மிக துறையில் இது ஒரு புதுமையான புத்தகம். அவதார புருஷரான பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருடன் சில ஆண்டுகள் தங்கி இருந்த அவரது சீடர்களுள் ஒருவரான மகேந்திர நாத் குப்தர், ஸ்ரீராமகிருஷ்ணரை சந்தித்த அத்தனை நிமிடங்களையும் டைரி குறிப்பாக எழுதி வைத்து, பின்னர் அவற்றை அப்படியே எழுத்து வடிவமாக்கி தந்து இருக்கிறார். இந்த சந்திப்புகளின்போது ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய கருத்துக்களை உள்ளது உள்ளபடி இந்த மூன்று புத்தக தொகுப்பில் தந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல், அப்போது காட்சிகள் எப்படி இருந்தனை என்பதை ஒன்று விடாமல் படம் பிடித்துக்காட்டுவதால் நாமும் ஸ்ரீ ராமகிருஷ்ணருடன் இருப்பது போன்ற நினைப்பு ஏற்பட்டு ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களையும், அப்போது நடந்தது என்ன என்ற அனைத்தையும் முழுவதுமாக உள்வாங்கிகொள்ள முடிகிறது. இந்த காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தரும் அவருடன் இருந்ததால், இந்த புத்தகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளை அறிந்து கொள்வதுடன் விவேகானந்தர் பற்றிய அரிய பல தகவல்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 21/11/12.