காவல்கோட்டம்
காவல்கோட்டம், சு. வெங்கடேசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 520ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-195-9.html தமிழகத்தில் பழங்காலந்தொட்டு காவல் தொழில் புரிந்தவர்கள், குற்றப் பரம்பரையினராக மாறிய வரலாற்றுப் பின்னணியில், மதுரை பகுதியின் 600 ஆண்டுகால வரலாற்றை அழமாக பதிவு செய்தபடி இந்த நாவல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. படித்து முடிக்கும்போது, இதில் இடம் பெற்றுள்ள பல கதாபாத்திரங்கள், அன்றைய மக்களின் பண்பாடுகள், கலாசாரம் ஆகியவை மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து அமர்ந்துவிடுகின்றன. மதுரை மாநகரின் அமைப்பு, அந்த நகரின் வீதிகள் எந்த நோக்கத்துக்காக எவ்வாறு அமைக்கப்பட்டன என்பது போன்ற வியப்புமிக்க பல தகவல்கள் இந்த நாவல் இடையே ஊடறுத்துச் செல்வதன் மூலம் இது நீண்டகால ஆய்வின் அடித்தளத்தில் உருவான நாவல் என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்துடன், சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் என்ற சிறப்பையும் தாங்கி மிளிர்கிறது.. நன்றி: தினத்தந்தி, 19/3/2014.
—-
திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும், டாக்டர் ஏ.ஈ. செல்லையா கல்வி அறக்கட்டளை, ஏபி 147, மூன்றாவது பிரதான சாலை, அறிஞர் அண்ணா நகர், சென்னை 40, விலை 250ரூ.
திருக்குறள் பற்றி சிறந்த ஆராய்ச்சி நூல் திருக்குறள் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அதில் குறிப்பிடத் தக்கது, வழக்கறிஞர் செ. வசந்தகுமாரி செல்லையா எழுதிய திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் என்ற நூல். மாணவர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்நூலை உருவாக்கியுள்ளார். திருக்குறளைப் பற்றி பல அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து, தனது கருத்துக்களையும் இணைத்துள்ளார். திருக்குறளின் சிறப்பை முழுமையாக அறிந்து கொள்ள உதவும் நூல். நன்றி: தினத்தந்தி, 19/3/2014