காஷ்மீர் இந்தியாவுக்கே
காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 304, விலை 250ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149352.html ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியரின் துறை சார்ந்த அனுபவமும், கதை சொல்லும் ஆற்றலும், சரித்திர ஆதாரங்களும் பின்னிப் பிணைந்ததாக உள்ள இந்நூல், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என நிறுவுகிறது. பிரிக்கப்படாத பாரதம் இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிளவுபட்டபோது காஷ்மீர் தனிநாடாக இருக்க விரும்பியது ஏன்? பிறகு காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணைய சம்மதித்தன் பின்புலம் என்ன? அப்போது முதல் பிரதமர் நேருவும் காஷ்மீர் மக்களின் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவும் செய்த தவறுகள் எவை? எனப் பல கேள்விகளுக்கு இந்நூலில் பதில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இருப்பதற்காக இன்னுயிர் ஈந்து போராடிய ராணுவ வீரர்களின் தியாகம், அந்த மாநிலத்துக்கென்று சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவு அளிக்கப்பட்டதன் பிரத்யேகப் பின்னணி, அரசியல் சாசன சபையில் அம்பேத்கரின் எச்சரிக்கை, மத அடிப்படைவாதத்தின் பிடியில் சிக்குண்ட அரசியல் தலைவர்கள், ஐ.நா. சபையின் தலையீட்டை தானாக வருந்தி வரவழைத்த பிரதமர் நேரு என சரித்திரத்தின் மறந்துபோன பல பக்கங்களை நினைவூட்டுகிறார் ஆசிரியர். ராணுவ நடவடிக்கைகளையும், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் வீரர்களின் செயல்பாடுகளையும் எழுதும்போது போர்க்களத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறார் கேப்டன் எஸ்.பி. குட்டி. சரித்திரத் தேர்ச்சி கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய நூல் இது. நன்றி: தினமணி, 11/12/15.