கிரவுஞ்சப் பட்சிகள்
கிரவுஞ்சப் பட்சிகள், வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, விலை 110ரூ.
கன்னடத்தில் பிரபல எழுத்தாளரான வைதேகி படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நூல். இதிலுள்ள எல்லாக் கதைகளிலும் ஆண், பெண் இணைந்த உலகமொன்று உள்ளது. அந்த உலகத்தில் பிரிதலும் உண்டு, சுவாரசியமான பேச்சு மட்டுமின்றி, துன்பத்தின் வரிகளும் இழையோடுகிறது. சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாலும், அதனூடே துக்கத்தின் சாயலும் படிந்துள்ளது. மனதைத் தொடும் இச்சிறுகதை தொகுப்பு நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழாக்கம் ஜெயந்தி. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.
—-
கம்யூனிசம், நா.மா. முத்து, வள்ளிமயில் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
வாழ்வியல் உயர்வுக்கு வழி வகுக்கும் பொதுவுடமைக் கொள்கையை உருவாக்கிய காரல் மார்க்சின் கொள்கையை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.