கிராமத்து ராட்டினம்
கிராமத்து ராட்டினம், ஜி. மீனாட்சி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்ட் ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 85ரூ.
இயல்பு எல்லையைத் தாண்டாமல் கதை சொல்வதென்பது சிலருக்கு வரம். அப்படியொரு வரம் வாய்க்கப்பெற்றவர் எழுத்தாளர் ஜீ. மீனாட்சி என்பது இந்த நூலில் அவர் படைத்திருக்கும் பதினோரு கதைகளிலுமே தெரிகிறது. வாழ்க்கைச் சக்கரம் எப்போதுமே மேலே இருந்தவர்களை கீழே தள்ளியும், கீழே இருந்தவர்களை மேலே உயர்த்தி வைத்தும் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதை இவரது கிராமத்து ராட்டினம் கதை விவரிக்கிறது.
—-
ஜீவிதக் கதைகள், ஜீவிதன், வான்மலர் பதிப்பகம், 64, நெமந்காரர் தெரு, வந்தவாசி 604 408, விலை 100ரூ.
குடும்பம் என்றாலே எல்லாம் இருக்கும். நேச பாசம் இருக்கும் அளவுக்கு ஆத்திரம் அடிதடியும் சில நேரங்களில் இடம் பெற்று விடக்கூடும். இதை எந்த கோணத்தில் அணுகினால் பிரச்சினைகளின் மத்தியிலும் சமாளிக்கலாம் என்பதற்கு இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகள் வாழ்க்கைப் பாடமாகி இருக்கிறது. கதை சொல்லும் உத்தி கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் நிஜத்தின் பிரதிபலிப்பாய் மனம் ஈர்க்கவே செய்கிறது இந்த கதைத்தொகுப்பு.
—-
கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல், 130, நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை 29, விலை 195ரூ.
இன்றைய இந்தியாவின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும், அதைத் தீர்க்கும் வகைகளையும் கதையாக புனைந்து இருக்கிறார். இவையெல்லாம் நடக்குமா என நினைத்தாலும் நிச்சயம் நடக்கும். நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 30/10/2013.