குர்ஆன் போதனைகள்
குர்ஆன் போதனைகள், சையித் இப்ராஹிம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 576, விலை 275ரூ.
குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்களை முஸ்லிம்களும், முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் எளிதில் அறிந்துகொள்வதற்கு உதவும் நூல். குர்ஆனில் பல அத்தியாயங்களில் உள்ள வசனங்கள் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. குர்ஆனின் தெய்வீகத் தன்மை குறித்தும், அனைத்து துறைகளிலும் வழிகாட்டக்கூடிய கருத்தகள் குறித்தும் தொகுத்து பொருள்வாரியாகப் பிரித்து அளக்கப்பட்டுள்ளது. அறிவியல், வாழ்வியல், சட்டஇயல், ஒழுக்கம், ஆண்-பெண் வாழ்க்கை முறை, வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய நல்லுரைகள் தற்போதைய இளைய சமுதாயத்தினர் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. கல்வியும், அறிவு வளர்ச்சியும் தேவை என்பது குர்ஆனில் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? அபப்டியானால், முதலாவது உங்களைப் போன்ற மனிதர்களை நேசியுங்கள்! போன்ற நபி மொழிகள் இந்த நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அனைத்து காலங்களுக்கும் எல்லா இனத்தவர்களுக்கும் பொருத்தமான முறையில் இஸ்லாமியப் போதனைகள் அமைந்துள்ளன என்பதை தற்போதைய காலத்துக்கு ஏற்றாற்போல் இந்நூலில் பல்வேறு தலைப்புகளாகப் பரித்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு தலைப்புக்கும் குர்ஆன் வசனங்கள் தொகுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். நன்றி: தினமணி, 3/8/2015.