குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 480, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-7.html

எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று குறிஞ்சிமலர். அரவிந்தன், பூரணி என்ற இரண்டு கதாபாத்திரங்களும் இந்த நாவலின் மூலம் பிரபலமானார்கள். இந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களேகூட பின்னாளில் குழந்தைகள் பலருக்கு சூட்டப்பட்டதும் உண்டு. சமூகம், அரசியல் இரண்டு களங்களும் சிறப்பாக வெளித்தெரியும் இந்நாவலில்,தேர்தல் காலத்தில் நிகழும் வன்முறை காட்டுமிராண்டிச் சம்பவம் எப்படி ஒரு மனிதன் வாழ்க்கையைச் சூனியமாக்குகிறது என்பதை கதையின் கடைசி முடிச்சாக இட்டிருப்பார் நா.பா. உரைநடை இலக்கியத்தில் ஒரு நாவலுக்கு உரிய இலக்கணத்தை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கும் காட்டும் உன்னதப் படைப்பு, அதற்கே உரித்தாற்போல், அழகிய அச்சுக்கோப்பில் வாசகர் விரும்பும் வண்ணம் திகழ்கிறது. பெரிய எழுத்துகளில் அத்தியாயப் பிரிவுகள் தனித்துக் காட்டப்பட்டு மூத்த தலைமுறையும் படிக்கும் வண்ணம் திகழ்வது சிறப்பு. நன்றி: தினமணி, 17/6/13.  

—-

 

மாணவர்களுக்கான அறிவியல் குவிஸ், மேலூர் இரா. சுப்ரமணிய சிவம், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 30ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-586-8.html

மாணவர்கள் பாட அறிவை மட்டுமின்றி, பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம், அதற்கு உதவும் வகையில் இந்நூலில் வினாடி வினா விடை பாணியில் பொது அறிவுத் தகவல்கள் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி.  

—-

 

விநாயர் கதைகள், கீர்த்தி, சங்கர் பதிப்பகம்,  15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-586-3.html

எந்த காரியத்தையும் செய்யும் முன் அந்த காரியம் தடையின்றி நடைபெற விநாயகரை வழிபடுவது நடைமுறை. அத்தகைய சிறப்புமிக்க மூல முதல்பொருளான விநாயகரின் திருவிளையாடல்கள், பல கதைகளாக தொகுக்கப்பட்டு நூலாக வெளியாகியுள்ளது. நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *