கோபிகிருஷ்ணன் படைப்புகள்

கோபிகிருஷ்ணன் படைப்புகள், கோபிகிருஷ்ணன், நற்றினை பதிப்பகம், சென்னை – 5, பக்: 1022, ரூ. 800. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-808-6.html

மறைந்த கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் முழுமையாக இந்தத் தொகுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடவே கோபிகிருஷ்ணனை யூமா, வாசுகி எடுத்த நேர்காணலும். கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் இருவிதத் தனித்தன்மைகளைக் காணலாம். ஒன்று, மொழியைக் கையாளும் விதம். அவருக்கே உண்டான ‘திருகல் மொழி’த் தன்மை – அதாவது, மொழியை திருகித்திருகி பயன்படுத்தும் லாகவம் (உ-ம்) ’வார்த்தை உறவு’ போன்ற கதைகள். இரண்டு, உரித்து அப்பட்டமான மனவெளியில் பச்சையான அந்தரங்கங்களை கதையின் நேர்த்தி கெடாமல் படைப்பாக்குவது. பச்சையான மொழி, அப்பட்டமான உண்மை, ஆடைகளற்ற உடல்கள், வெளிப்படையான பெண்கள், பூச்சுகளற்ற மனவெளி, போகிறபோக்கில் சுறுக்கிச் செல்லும் நையாண்டி, மனப்பிறழ்வு, மனநல மருத்துவர்கள் – இவைதாம் கோபிகிருஷ்ணனின் அகவெளி. இந்த அகவெளிதான் அவரது படைப்புகளின் ஊற்றுக்கண். இந்தத் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் யூமா, வாசுகியின் நேர்கானல் கோபிகிருஷ்ணனின் மனப் பரப்பைக் காட்டும் ஜன்னல் அது. தமிழ்ப் படைப்புலகில் கோபிகிருஷ்னனின் இடம் மெளனிக்கு நிகரானது என்பதை உறுதிப் படுத்துகிறது இந்தத் தொகுப்பு. நன்றி: தினமணி (25.03.2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *