சமயம் கடந்த வாழ்க்கை
சமயம் கடந்த வாழ்க்கை, வீ.ப. சதாசிவம், தி.சென்டர் பார் ரிசர்ச் இன் செக்குலர் தாட்ஸ் அண்ட் ஐடியாஸ், ஆர் 70, கோவைபுதூர், கோவை 641042, விலை 100ரூ.
அறிவுலகத்தில் அதிகமாகப் புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று மதச்சார்பின்மை. இது நமது அரசியலமைப்புச் சட்டநூலின் முதுகெலும்பாக உள்ளது. இதன் அடிப்படையில் சமயம் கடந்த வாழ்க்கை என்ற தலைப்பில் ஆசிரியர் வீ.ப. சதாசிவம் எழுதியுள்ள புத்தகம் இது. நவீன வாழ்க்கையில் மதம் என்பதின் தேவை அற்றுவிட்டது என்பதைத் தனது தர்க்கங்கள் வாயிலாக முன்வைக்கிறார் ஆசிரியர்.
—-
மதுரை ஆதீன வரலாறு, மதுரை ஆதீன வெளியீடு.
திருஞானசம்பந்தப் பெருமானால் 1500 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட மதுரை ஆதீனத்தின் உட்பகுதிக்குள் நடந்திருக்கும் நவீன மாற்றங்களைத் தெரிவிக்கும் வண்ணப் புகைப்படங்களும் உண்டு. மதுரை ஆதீன வரலாறு வெளியீடு-மதுரை ஆதீன வெளியீடு.
—-
சிந்தாமணி நிகண்டு, மூலமும் உரையும் அகராதியும், வ. ஜெயதேவன், இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு. 259, நேருநகர், 2ஆவது முதன்மைச் சாலை, கொட்டிவாக்கம், சென்னை 96, விலை 100ரூ.
இலங்கை வல்வெட்டித் துரையைச் சேர்ந்த வல்வை ச. வைத்தியலிங்கர் இயற்றிய புகழ்பெற்ற சிந்தாமணி நிகண்டு புதிய பதிப்பாக நோக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 1876ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிந்தாமணி நிகண்டின் திருத்தப்பட்ட பதிப்பு இது. இந்நிகண்டில் 3088 பழஞ்சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. சிந்தாமணி நிகண்டின் பதிப்பு வரலாற்றையும் பதிப்பாசிரியர்கள் சுவாரசியமாகத் தந்துள்ளனர். நன்றி: தி இந்து, 13/10/13.