வைரமணிக்கதைகள்
வைரமணிக்கதைகள், தாரிணி பதிப்பகம், பிளாட் எண். 4ஏ, ரம்பா பிளாட்ஸ், 32/79, காந்திநகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை 20, விலை 450ரூ.
‘எழுத்தாளர் வைரவனின் 80 சிறந்த சிறுகதைகளை தேர்வுசெய்து ஒரே பெரிய புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். வைரமணிக்கதைகள் என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமானதே என்பதை பல கதைகள் நிரூபிக்கின்றன. நன்றி: தினத்தந்தி 16/10/2013.
—-
சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 150ரூ.
சிறுவருக்கு மகாபாரதம் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் பெரியவர்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் பாதிப்பக்கத்தில் வண்ணப்படம். பாதிப்பக்கத்தில் கதை. மொத்தம் 170 அத்தியாயங்களில் மகாபாரதத்தை ரசிக்கும்படி அழகாக எழுதியுள்ளார் எழுத்தாளர் ரேவதி. ஓவியங்களை வரைந்துள்ள வேதா பாராட்டுக்குரியவர். மாணவ மாணவிகளுக்குப் பரிசளிக்க அருமையான புத்தகம். நன்றி: தினத்தந்தி 16/10/2013.
—-
எனது பர்மா குறிப்புகள், செ. முஹம்மது யூனூஸ், காலச்சுவடு To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-047-2.html
தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் துவங்கி, இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேதாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மியர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்களுக்கு நேர்ந்த வாழ்வுரிமை சிக்கல்கள் என, தொடரும் பதிவுகள், இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நேர்ந்தது வரை நீள்கின்றன. எப்போதும் அலைவு வாழ்வை வாழ நேர்ந்துவிட்ட தமிழர்களில், பர்மியத் தமிழர்களின் வாழ்வு, கலாசாரம், கலை, இலக்கியம் அனைத்தையும் நுட்பமாகக் காட்டுவதோடு, ஒரு காலகட்டத்தைய சமூக வரலாற்றை தன்னுள் பொதிந்துள்ளது செ. முஹம்மது யூனூஸின் குறிப்புகள். அதை, வரலாற்று அக்களைறயோடு தொகுத்திருக்கிறார் ராமமூர்த்தி. இந்த புத்தகம், உலகத் தமிழாய்ச்சி நிறுவன நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. நன்றி: தினமலர், 6/10/2013.