நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், ராம கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 600031, பக். 294, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-8.html
இந்திரா பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி கால நிகழ்வுகளை, ஒரு இந்துத்வ கண்ணோட்டத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். அரசியல் ரீதியாக ஜனநாயக வாதிகளால் நெருக்கடி நிலையை விமர்சித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான கோணத்தில் நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நூலாசிரியர். ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் அனுபவித்த இன்னல்களை பற்றி எழுதியுள்ளார். ஆனால் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளரின் பார்வையில் பதிவாகியுள்ள விஷயங்களில், தமிழகத்தை சேர்ந்த மிசா கைதிகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அன்று முன்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பற்றி தகவல்கள் காணோம். -ஜனகன்.
—-
ரத்த ஞாயிறு, டாக்டர் கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 384, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-156-7.html
மராட்டிய வீரன் சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் இனத்துக்காகவும், மதத்துக்காகவும் ஏற்பட்ட ஒரு சுதந்திர அல்லது சுயராஜ்ய போராட்டங்கள். இதுவும் ஒரு விதமான விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்ட ஏற்பட்ட போராட்டத்தின் மூலதனத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் என்பதில் ஐயமில்லை. இந்த நாவலில் சிவாஜியின் பற்பல வீரசாகசங்கள், தந்திரங்கள் ஆகியவை மிக விறுவிறுப்பாய், தனக்கே உரித்தான அலங்காரத் தமிழ் நடையில் தந்திருக்கிறார் ஆசிரியர். சிவாஜியின் அத்தனை வெற்றிகளுக்கும் பின்னால் பூஜ்யா என்ற தமிழ்ப் பெண் விளங்குகிறார் என்பது ஆசிரியரின் அற்புதமான கற்பனைத் திறன். சரித்திர நாவல் பிரியர்களுக்கு ஒரு அருமையான விருந்து. -சிவா.
—-
டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ், வாதினி, 19/29, ராணா அண்ணா நகர், ஆப் பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை 600078, பக். 172, விலை ரூ.120 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-870-8.html
பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி, ஆனந்த் ராகவ் சில வாழ்க்கை நிகழ்ச்சிகளை கிண்டலான பார்வை பார்க்கிறார். சில கதைகளில் சோகம் இழையோடப் பேசுகிறார். அவ்வளவும் மணி, மணியான கதைகள், ஆனந்த் ராகவ் புறக்கணிக்க முடியாத ஒரு சிறுகதைக் கலைஞர். கதைகளில் வரும் கள வர்ணனை, உரையாடல், இவை கலை அழகுடன் கச்சிதமாக உள்ளன. டாக்சி டிரைவர், அம்மாவின் நகை, திரை, இரண்டாவது மரணம், ஐன்ஸ்டீன் ஐயப்பன் ஆகிய அருமையான கதைகளை, இரண்டு முறை வாசித்து அனுபவிக்கலாம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 6/10/2013.நன்றி: தினமலர், 6/10/2013.

