சமூக வரலாற்றில் அரவாணிகள்
சமூக வரலாற்றில் அரவாணிகள், முனைவர் முகிலை ராசபாண்டியன் மற்றும் நான்குபேர், விசாலாட்சி பதிப்பகம், பக். 382, விலை 300ரூ.
ஐந்து பதிப்பாசிரியர்கள், 58 எழுத்தாளர்களிடமிருந்து அரவாணிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளைப் பெற்று, தொகுத்து தயாரித்துள்ள நூல். திருநங்கைகள் பற்றிய எல்லா தகவல்களும் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் இருந்தும் பல மேற்கோள்களுடன் கூடிய ஒரு சில கட்டுரைகள் இருக்கின்றன. சமூகப் பார்வையோடும் சில கட்டுரைகள். நல்ல முயற்சி. -ஜனகன்.
—-
கைகாட்டி, கணபதி அருணாசலம், ஜி. வேதகிரி, 32, கேசவப் பெருமாள் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 215, விலை 100ரூ.
அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், அதை அறம்சார்ந்த வழியில் முன்னோர் காட்டிய, குரு காட்டிய பாதையில் நடைமுறைப்படுத்த பல்வேறு விஷயங்களை தெளிவாக வரிசைப்படுத்தி இருக்கிறார். ஆசாரம், அனுஷ்டானம் ஆகியவற்றை தவற விட்டதாக கருதும் அனைவரும் அதைப் படித்தறிய வேண்டிய தகவல்கள் இதில் உள்ளன. நன்றி: தினமலர், 29/12/13 சமூக வரலாற்றில் அரவாணிகள், முனைவர் முகிலை ராசபாண்டியன் மற்றும் நான்குபேர், விசாலாட்சி பதிப்பகம்