சாகச வீரர் சச்சின்
சாகச வீரர் சச்சின், குன்றில்குமார், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 100ரூ.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் இன்று உலகப்புகழ் பெற்ற சாதனையாளராக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார் குன்றில்குமார். கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிராட்மேன். அவர் மனதைக் கவர்ந்தவர் டெண்டுல்கர்தான். தன்னுடைய 90வது வயது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள டெண்டுல்கரை அழைத்துப் பெருமைப்படுத்தினார் பிராட்மேன். சாதனை வீரர் டெண்டுல்கர் வரலாறை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற புத்தகம் இது. டெண்டுல்கரின் அபூர்வமான படங்கள் இடம் பெற்றிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு அம்சம்.
—-
சித்தர்களின் பூசா விதிகள், சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ.
பூஜைக்கு ஏற்ற மலர்கள், வாசனை திரவியங்கள், ஆறுகால பூஜைகளுக்கான நேரம், அபிஷேக பலன்கள், புனித நீர் சேகரிப்பு, பூஜை முறைகள், தத்தவம் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
—-
அருள்பொழியும் ஆலயங்கள், இராம. முத்துக்குமரனார், ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்கம், 47, குமரன் கோவில் வீதி, கடலூர் துறைமுகம், விலை 60ரூ.
திருச்செந்தூர முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களை அறிந்து கொள்ள உதவுவதுடன் அந்த ஆலயங்களுக்கு நேரடியாக சென்று வர வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் பகிரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 29/5/13.