சாதக வணிகம்

சாதக வணிகம் (வெளியீடு: விளக்கு பதிப்பகம், ஆக்சியம் மையம், 44/66, தெற்கு ரத வீதி, திண்டுக்கல் – 624 001, விலை: ரூ. 60)

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த போட்டியை எப்படி சாமளிப்பது என்பது குறித்து, பயனுள்ள யோசனைகளைக் கூறியுள்ளார், நூலாசிரியர் ஆக்சியம் எஸ். அப்துல் நாசர். வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறந்த வழிகாட்டி. நன்றி:தினமலர்(13.3.2013).  

—-

 

ஊராகப் பொருளாதாரமும், வேளாண்மைப் பொருளாதாரமும் (ஆசிரியர்: வே.கலியமூர்த்தி, வெளியிட்டோர்: கடரொளிப் பதிபகம், 99/அ3, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை – 108, விலை:ரூ.150).

வேளாண்மைப் பொருளாதாரத்தின் ஆய்வுக்கூறுகள் அனைத்தும் ஊரகப் பொருளியலில் அடங்கியுள்ளன. அதிலேயே ஊரக சுகாதாரம், மின் வசதி, குடியிருப்பு, சாலை வசதி, தகவல் தொடர்பு போன்றவைகளுன் அடங்கியுள்ளன. ஒருநாட்டின் பொருளாதாரத்தை நிர்மானிக்க முக்கிய பங்கு வகிப்பது ஊரக மற்றும் வேளாண்மைப் பொறுளாதாரமே. பொருளாதாரத்தை பற்றி ஆய்வு செய்த ஒரு முழுமையான நூலாக உள்லது. இது கல்லூரி பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிக்க பயன் தரும். நன்றி: தினமலர்(13.3.2013).  

—-

 

அனுபவங்கள் சொன்ன மகிழ்ச்சியான இரகசியம்! (ஆசிரியர்: ஜி.பாலசுப்பிரமணியன், வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை:ரூ. 60)

தனது வாழ்க்கையில் நடந்த பாதிக்ககூடிய சம்பவங்களையும், அதனை தீர்க்க எடுத்த நடவடிக்கை விவரங்களையும் கூறி இருக்கிறார் நூலின ஆசிரியர். தமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தாமே எப்படி தீர்ப்பது என அனுபவங்கள் மூலம் விளக்குகிறார். நன்றி: தினமலர்(13.3.2013).  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *