நடைபாதை கீதை

நடைபாதை கீதை (ஆசிரியர்: தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, வெளியிட்டோர்: ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை – 8; விலை: ரூ. 200) அன்பு, ஆன்மா, உண்மை ஆகியவற்றை மிக எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை ஆசிரியர் சுவாமி ஓங்கரநந்தா எழுதியுள்ளார். ’கீதை’ என்னும் பெயருக்குகேற்ப நூல் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் எல்லா துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று பரம் பொருளுடன் சத்தியவாமவது எப்படி என்பது சிறு, சிறு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. பொன்மொழிகள் போல மனதில் பதியும் வகையில் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை சொல்வதால் ஆன்மிகவாதிகள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி (6.3.2013).  

—-

 

இலக்கிய தீபம் (வெளியீடு: பாரி நிலையம், 184/88, ப்ராட்வே, சென்னை – 108: விலை: ரூ. 60).

இலக்கிய ஆராய்ச்சி பற்றிய 16 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிக பயனுள்ள நூல். புத்தக ஆசிரியர் எஸ். வையாபுரி பிள்ளை சென்னை பல்கலைக்கழகத்தில் 1936 முதல் 1946 வரை தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியவர். இவரது முயற்சியால் தான் லெக்சிகன் தமிழ் அகராதி வெளிவந்தது குறிபிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி (6.3.2013).  

—-

 

ஜோதிட பரிகாரங்கள் (ஆசிரியர்: யோகி; ஸ்ரீஇராமானந்தகுரு; வெளியிட்டோர்; சங்கர் பதிப்பகம், 15/2, டீச்சர்ஸ் கில்டு காலனி, இராஜாஜிநகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை – 49; விலை: ரூ.45)

அனைத்து வித பிரச்சினைகளுக்கும் உரிய பரிகாரங்கள் அதற்குரிய விளக்கங்களுடன் கூறப்பட்டுள்ளன. 100 கேள்விகளுக்கு பதில்கள் தரப்பட்டுள்ளன. அதில் பல பதில்கள் வியக்க வைக்கும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *