சாதியும் நானும்
சாதியும் நானும், பதிப்பாசிரியர்-பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 257, விலை 200ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-4.html இந்தியாவில் ஜாதியம் என்ற சமூக அவலம் இந்த நவீன காலத்திலும் ஆழ வேரூன்றியுள்ளது. இதனால் மனித சமூகம் சந்தித்து வரும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இது தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி, ஜாதியின் கொடூரத்தை இந்த உலகுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளார் பதிப்பாசிரியர். குக்கிராமம், கிராமம், நகரம், மாநகரம் என எந்த ஓர் இடத்தையும் ஜாதிக்கொடுமை விட்டு வைக்கவில்லை என்பதைத் தங்களது அனுபவங்களின் மூலம் கட்டுரையாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். அதுவும் கல்வியாளர்களும், பண்பாளர்களும் சங்கமிக்கும் கல்வி நிறுவனங்களையும் ஜாதி விட்டு வைக்கவில்லை. இந்த சமூகம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. மண்ணுடையார் என்ற தலைப்பிலான கட்டுரையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள பி.எழிலரசி, ஜாதியின் வேர் வலுவோடு எவ்வளவு ஆழத்துக்கும் போகக்கூடியது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்தை யாரும் மறுக்க இயலாது. இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையாளரின் துயரமான அனுபவங்களையும் படித்து அறிவோர் நிச்சயம் ஜாதியத்தின் கொடுமையை உணருவர். நன்றி: தினமணி, 20/10/2014.