சாலப்பரிந்து
சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், காலச்சுவடு, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html
நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார். க. மோகன ரங்கன் 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம் உள்பொதிய எழுதப் பெற்று உயரிய கதைகள். கதைகளின் ஊடே அவர் வெளிப்படுத்தும், பல்வேறு பண்பாட்டுத் தகவல்கள், பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், வழிபாடு, சமயச் சடங்குகள், தாவரங்கள், மருத்துவக் குறிப்புகள் பயனுள்ளவை மட்டுமல்ல, போற்றத்தக்கவையும்கூட இளம் படைப்பாளிகள் அவசியம் படித்து மகிழலாம். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 7/7/13.
—-
நூறு நாள் நாடகம், அசோக மித்திரன், கவிதா வெளியீடு, பக். 208, விலை 125ரூ.
அசோகமித்திரன், பிரபல எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், அறியப்பட்டவர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாக இவருடைய படைப்புகள், இலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்பவை. அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுதி நூல் இது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் எனப் பரந்து பட்ட பார்வையில், பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார். கனமான விஷயங்கள், ஆழமான பார்வை, அதேசமயம், நகைச்சுவை இழையோடும் நடையில் ஒவ்வொரு கட்டுரையும் பரிமளிக்கிறது. உதாரணத்திற்கு, பெண்கள் புருஷன் ஒரு மோட்டார் சைக்கிள் இல்லாமல், பாவம் ரயிலிலும், பஸ்சிலும் அலுவலகம் செல்கிறாரோ என்று கவலைப்படுவதன் காரணம் என்ன என்று விவரிக்கும் கட்டுரையைச் சொல்லலாம். நன்றி: தினமலர், 7/7/13.