ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், மவுலவி எஸ்.ஏ.காஜா நிஜா மூத்தின்யூசுபி, நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 80ரூ.

கி.பி. 712லிருந்து கி.பி. 1492வரை, 780 ஆண்டகள் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சி, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்றவை, ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு பேருதவி புரிந்தது. அத்தோடு மட்டுமல்ல. அந்த இணையற்ற திட்டங்கள், ஐரோப்பாவின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி, அவர்களுக்கும் நன்மை விளைவித்தது. கி.பி. 1442ல் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது, எதிரிகளின் சதிகளால் மட்டும்தானா அல்லது வேறு காரணங்கள் என்ன என்பதை மிக விரிவாக, அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். வரலாற்று மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. -சிவா.  

—-

 

கைத்தறி பெட்டகம், சிறுமுனை வெ, காரப்பன், காரப்பன் சில்க்ஸ் வெளியீடு, 32, சி,சில்க் பஜார், சிறுமுகை, கோவை மாவட்டம், பக். 230, விலை 240ரூ

கைத்தறி துணி குறித்த நுணுக்கங்களை கூறும் நூல். கைத்தறி சோலை நெசவில் அச்சு புனைக்கும் முறையை அதிகம் செய்பவர்கள் பெண்கள். அது அவர்கள் திறனைக் காட்டுவதாகும். வேப்ப மரத்தில் இருந்து மஞ்சள் வண்ணமும், செம்பருத்தியில் இருந்து வாடாமல்லி நிறமும் போட்ட காலம் போய், இன்றைய எண்ணங்கள் போல வண்ணங்களும் போட்டுக் கொள்ளும் வகையில் தொழில் வளர்ந்திருப்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறர். ஆனால், நெசவாளிகள் வறுமைக்கு பக்தி காரணமாகிறது என்று கூறி, நாள் முழுவதும் உழைத்தால் பணம் வரும் என்கிறார். வேறு தொழில்களில் இருப்பவர்கள், குடும்பத்துடன் சாப்பிடும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்காது என்றும். இத்தொழிலில் இது சிறப்பு என்று கூறும் ஆசிரியர், கைத்தறி தொழில் வளர்ச்சி அல்லது சந்திக்கும் பிரச்னைகள் பற்றி புள்ளி விவரங்கள் தரவில்லை. கைத்தறி வளர்ச்சியில், முன்னுக்கு வந்தவர் பார்வையில் உருவான பெட்டகம் இது. நன்றி: தினமலர், 7/7/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *