சாவித்திரி வாழ்க்கை வரலாறு
சாவித்திரி வாழ்க்கை வரலாறு, நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, தோழமை வெளியீடு, விலை 250ரூ.
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று சாவித்திரி – கலைகளில் ஓவியம் என்ற தலைப்பில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் நாஞ்சில் மு.ஞா. செ. இன்பா. 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா படத்தில், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். அப்போது அரும்பிய காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. இரு குழந்தைகள் பிறந்தன. 1968ம் ஆண்டில் சாவித்திரி டைரக்டர் ஆனார். அதனால் பல பிரச்சினைகளை சந்தித்தார். சொத்துக்களை இழந்தார். ஈருல் ஓருயிர் என்பதுபோல் வாழ்ந்த ஜெமினி கணேசனையும் பிரிந்தார். இறுதியில், சுமார் 19 மாதங்கள் கோமாவில் இருந்து 1981 டிசம்பர் 26ந் தேதி உயிர் நீத்தார். சாவித்திரியின் வரலாறு, சினிமாக் கதைகளையும் மிஞ்சுவது. அவர் மீது பற்று கொண்டவர்கள் இந்த நூலைப் படிக்கும்போது கண் கலங்கி விடுவார்கள். ஏராளமான படங்களுடன் வெளிவந்துள்ள இப்புத்தகம், வாழ்க்கை வரலாறு நூல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நன்றி: தினத்தந்தி.
—-
இயற்கையின் ஊடலும் கூடலும், பாவலர் மு. ராமச்சந்திரன், எழில் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
சின்னச் சின்ன சொற்களில் உயரிய சிந்தனைகளுடன் அழகுற படைக்கப்பட்டுள்ள கவிதைகளை படிப்பவர்களுக்கு இயற்கையின் ஊடலையும், கூடலையும் நூலாசிரியர் நயம்பட வெளிப்படுத்தியுள்ளார். நன்றி: தினத்தந்தி.