சிநேகிதி
சிநேகிதி, அகிலன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 17, பக். 176, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-372-2.html
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் அகிலன். அவருடைய சிநேகிதி நாவல் மிக முக்கியமானது. சமீபத்தில் இந்நூலின் 17ம் பதிப்பு வெளிவந்துள்ளது. இன்றைய சூழலில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் விரிசல்தான் பாலியல் சிக்கல்களுக்கு அடிப்படையாக உள்ளது. தெளிவான புரிதலோடு ஆணும், பெண்ணும் காதலை எதிர்கொண்டிருந்தால் பெரும்பாலும் சிக்கல்கள் எழுவதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்பதை விளக்கும் ஓர் அற்புதமான நாவலை 1951லேயே அகிலன் எழுதியுள்ளது வியப்பளிக்கிறது. ஒருவருடைய மனைவி இன்னொருவருடைய காதலியாக மாறித் துணைவியாக அமைய முடியும் என்பதை மிக நாகரிகமாக, காரண காரியங்களோடு மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது புதுமையாக உள்ளது.
—–
ஆராய்ச்சித் தொகுதி, மு. இராகவையங்கார், பூம்புகார் பதிப்பகம், சென்னை 108, பக். 608, விலை 380ரூ.
சேது சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய இராமநாதபுரத்தில் வாழ்ந்த சதாவதானம் முத்துஸ்வாமி ஐயங்காரின் வாரிசுதான் பேராசிரியர் மு. இராகவையங்கார். இவர் முதுபெரும் தமிழறிஞர் மட்டுமல்ல. ஆராய்ச்சி அறிஞரும் கூட. நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழ் ஆராய்ச்சித் துறைக்கு வளம் சேர்த்தவர். தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் மூலம், பலராலும் அறியப்படாத புதிய ஆய்வு முடிவுகளை முன்வைத்தனர். இலக்கியம், இலக்கணம், இதிகாசம், புராணம், மொழிநூல், எழுத்து, வரலாறு, நூற்பதிப்பு முறை, நூலாராய்ச்சி, தமிழக வரலாறு, பண்டைத் தமிழறிஞர்களின் ஒழுக்கநெறி, பண்டைத் தமிழர்களின் ஒழுக்கநெறி, சிலாசாசனங்கள், பண்டைக் காலத்துச் சான்றோர்கள் முதலிய பல பொருள்களில் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். இந்நூலில் அவை அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வால்மீகி முனிவரும் தென்னாடும் என்ற ஆராய்ச்சிக் கட்டுரைத் தொடங்கி மொத்தம் 35 கட்டுரைகள். அத்தனையும் அரிய ஆய்வு வகையைச் சேர்ந்தவை. ஆய்வுலகம் பயன்பெறும். நன்றி: தினமணி, 28/11/2011.