வாடிய மலர்
வாடிய மலர், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை 108, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-2.html
1947 ஆகஸ்டு 15ந் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு சுதந்திர நாடுகளாக உருவாயின. பிரிவினைக்கு முன்பும் பின்பும் மதக்கலவரங்கள் மூண்டு, இரு தரப்பிலும் சுமார் 20 லட்சம்பேர் பலியானார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு சீக்கிய வாலிபருக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையும், அவர்கள் காதல் நிறைவேற ஒரு இந்து இளைஞன் நடத்திய புரட்சியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் வாடிய மலர். எழில் மிக்க நடையில் உணர்ச்சி மயமாக இந்த நாவலை உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் ஜி.ஏ. வடிவேலு. சிறந்த நாவல்களின் வரிசையில் இது நிச்சயம் இடம் பெறும். நன்றி: தினத்தந்தி, 26/9/2012.
—-
பறவைகளும் வேடந்தாங்கலும், பதிப்பாசிரியர்-பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-3.html
பறவைகள் பற்றிய போதிய புகைப்படங்கள் இல்லாத நாட்களில் அவற்றைக் கறுப்பு வெள்ளையில் படங்களுடன் பிரசுரித்தும் கோட்டோவியம் வரைந்து அடையாளம் காட்டிய பெருமை இந்நூலுக்கு உண்டு. பொதுவாக காக்கா, குருவிகள் தாம் பறவை என்று சொல்லி வந்தவர்களுக்கு பறவைகளின் ஆங்கிலப் பெயர்கள், தமிழில் அவற்றின் பெயர் மற்றும் அவற்றை அழைக்கும் வழக்கில் உள்ள பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு அவற்றை பாமரர்களுக்கும் அடையாளம் காட்டிய இந்நூலை பறவைகள் பற்றிய ஓர் அகராதி என்றே சொல்லலாம். பறவைகளின் இயல்பு, உணவுப் பழக்கம், வாழ்விடம், கூடமைக்கும் முறைகள், முட்டையிடும் காலம், ஆண், பெண் அடையாளம் காணும் முறைகள் போன்ற பறவைகள் தொடர்பான 59 கட்டுரைகளும் வேடந்தாங்கல் குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பே இந்த புத்தகம். பறவைகளுக்கு ஒரு தாய் வீடாக நம் மாநிலத்தில் உள்ள வேடந்தாங்கல் விளங்குவதையும் அதைச் சுற்றியுள்ள மக்களும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் விழிப்புணர்வுடன் காப்பதையும் இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினமணி, 28/11/2011.