தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள்
தமிழக பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள், முனைவர் சி. நல்லதம்பி, புலம்.
தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருவாரியான பழங்குடியின மக்கள் வாசித்து வருகின்றனர். தமிழகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை கணிசமானது. வரலாற்று ஆய்வாளர்களால், பழைய கற்காலம் துவங்கி, இந்த மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து வந்தது குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மக்களின் தொடர்ச்சியாக தான், கல்வராயன் மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, மனித இனத்தின் மறு உற்பத்தி செயல்பாட்டுக்குரிய சடங்கு முறை, கூத்து முதலான கலை வடிவங்களின் இயல்பையும், அவற்றின் தனித்தன்மையும் முனைவர் சி. நல்லதம்பி இதில் பதிவு செய்துள்ளார். மொத்தம் 216 பக்கங்களுடன் நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன்பெறலாம்.
—-
வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 600014, பக். 348, விலை 270ரூ. To buy this Tamil book – www.nhm.in/shop/100-00-0000-815-8.html
வேதத்தில் கூறப்பெற்றுள்ள வானவியல், மருத்துவம், தொழில் நுட்பம், நுண் கலை முதலான அறிவியல் செய்திகள், அனைத்தையும் தொகுத்து விளக்கியுள்ள நூலாசிரியர். அறிவியல் செய்திகள் அனைத்தையும் தொகுத்து விளக்கியுள்ளார் நூலாசிரியர். அறிவியல் செய்திகள், ஆன்மிகச் செய்திகள், புராணச் செய்திகள் இடம் பெறுவதுடன், வரலாற்றுச் செய்திகளும் நூலில் இடம் பெறுவதுடன், வரலாற்றுச் செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. வேதவியாசர், வால்மீகி, வராகமிகிரர், பாஸ்கரா சாரியார், மாக்ஸ்முல்லர், எட்மண்ட் ஆலி, பராசரர், விவேகானந்தர், டாக்டர் அம்பேத்கர், மகான் அரவிந்தர் முதலானோர் வாழ்க்கைக் குறிப்புகளும், உருவப்படங்களும் வரலாற்று அறிவை நல்குகின்றன. கணித அறிவு, தசம முறை, வடிவக்கணிதம் முதலியன, நம் இந்தியாவில் தோன்றியவை என, ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். உலகின் முதல் அணை தமிழகத்தின் கல்லணையே என்பதும், கட்டடக் கலையின் முன்னோடி இந்தியாவே என்பது பெருமையளிக்கும் செய்திகள். நான்கு வேதங்களும் என்ன கூறுகின்றன என்பதை ஆசிரியர் சுருக்கமாக விளக்குகிறார். ராமானுஜர், சைதன்ய மகாப்பிரபு, கபீர்தாஸ், குருநானக், மீராபாய் போன்ற பக்தப் பெருமக்களின் வரலாற்றுச் சுருக்கம் நன்று. உலகிலேயே முதல் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்தன என்ற செய்தியும், காசி, பூரி, நாகை சிதம்பரம், ஸ்ரீரங்கம் முதலியை ஊர்களில் உள்ள கோவில்கள் நூலகங்களை அமைத்துப் பராமரித்தன என்பதும், நாட்டிற்குப் பெருமை சேர்ப்பன. பல்துறைச் செய்திகளின் கருவூலமாய் விளக்கும் இந்நூலின் ஆசிரியர் பாராட்டுக்குரியவர். -பேராசிரியர் ம.நா.சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர், 11/8/13.