ஒன்பதாவது வார்டு

ஒன்பதாவது வார்டு, கோட்டயம் புஷ்பநாத், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ.

To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-284-5.html

டாக்டர் ஆகும் தனது கனவை கலைத்தவர்களை பழிவாங்கும் பெண் ஆவியின் கதை தான் இந்த நாவல். கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆவி இன்னொரு பெண்ணின் உடலில் புகுந்து பழிவாங்கும் கதையை விறுவிறுப்புடனும், திகில் கலந்தும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் கதையின் போக்கு அமைந்துள்ளது. மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் கோட்டயம் புஷ்பநாத் எழுதிய இந்த கதையை தமிழில் சிவன் மொழிபெயர்த்திருக்கிறார். திகில் கதை ரசிகர்களை கவரும் வகையில் வெளிவந்துள்ள நூல் இது.

—-

 

சார்லி சாப்ளின்-ஒரு தரிசனம், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, விலை 150ரூ.

To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-511-7.html

உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், ஊமைப்பட காலத்திலேயே அவர் கொடிகட்டிப் பறந்தவர். சிரிப்போடு சிந்தனையையும் சேர்த்து வழங்கியவர் அவர். இன்றும் அவருடைய படங்கள் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் வலம் வருகின்றன. அவருடைய வாழ்க்கை வரலாற்றை, தொலைக்காட்சி தயாரிப்பாளரும், பல படங்களுக்குத் துணை இயக்குனராகப் பணியாற்றியவருமான தி. குலசேர் சுவைபட எழுதியுள்ளார். சாப்ளின் நடித்த பல படங்களின் கதைகளும் இடம் பெற்றுள்ளன. நிறைய படங்கள், கண்ணைக் கவருகின்றன. மொத்தத்தில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்று கூறலாம். நன்றி: தினத்தந்தி, 26/9/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *