இறகுதிர் காலம்

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, பக். 136, விலை 100ரூ.

இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இயற்கை குறித்தும், சுற்றுச் சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயனுள்ள நூல். ஆசிரியரின் நடையழகு சிறப்பானது. -சிவா. நன்றி: தினமலர், 30/6/13.  

—-

 

பார்க்கப் பார்க்க ஆனந்தம், உஷா கிருஷ்ணன், கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு (நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-9.html

இந்த நாவலை படிக்கும்போது இதில் இடம் பெற்றுள்ள 15 பகுதிகளும் படிக்க, படிக்க ஆனந்தத்தை தருகிறது. அந்த அளவுக்க ரிஷி என்ற கேரக்டரை கொண்டு ஒரு உணர்ச்சிமயமான காதலை புத்தகம் முழுவதும் பட்டை தீட்டி வைத்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள் விரும்பி படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 31/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *