சினிமா பத்திரிகையாளர் சங்கம் 60ஆம் ஆண்டு சிறப்பு மலர்
சினிமா பத்திரிகையாளர் சங்கம் 60ஆம் ஆண்டு சிறப்பு மலர், சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை, விலை 200ரூ.
சென்னையில் உள்ள சினிமா பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்ற. அதையொட்டி சிறப்பு மலர் வெளியிட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பட அதிபர்கள் பற்றிய சுவையான தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் படம் தயாரித்த முதல் தமிழர் நடராஜ முதலியாரை டைரக்டர் ஸ்ரீதர் பேட்டி கண்டு எழுதிய கட்டுரை, தமிழ் நாட்டின் முதல் சினிமா பத்திரிகையான சினிமா உலகம் பத்திரிகையை 1935ம் ஆண்டில் தொடங்கி நடத்திய பி.எஸ்.செட்டியார், புகழ் பெற்ற சினிமா பத்திரிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் – கட்டுரைகள், தேசிய விருது பெற்ற கலைஞர்கள் – இப்படி ஏராளமான விஷயங்கள் இந்த மலரில் உள்ளன. சினிமா ரசிகர்களுக்கு நல்விருந்து. சங்கத்தின் தலைவர் மேஜர்தாசன், செயலாளர் சி.என்.கிருஷ்ணன் குட்டி, பொருளாளர் டி.ஆர். பாலேஷ்வர் மற்றும் நிர்வாகிகள் இந்த மலரை மணம் மிக்க மலராக மலரச் செய்துள்ளனர். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.