சின்ன தூண்டில் பெரிய மீன்
சின்ன தூண்டில் பெரிய மீன், ஆப்பிள் பதிப்பகம், சென்னை, விலை 85ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-245-6.html வாழ்க்கையில் வெற்றி பெற அளவான வளங்களை வைத்து பெரிய வெற்றிகளைப் பெறுவது எப்படி என்பதை மைய கருத்தாக வைத்து நூலாசிரியர் சோம. வள்ளியப்பன் எழுதி உள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு இந்த நூல் பயனுள்ள வகையில் இருக்கும். நன்றி: தினத்தந்தி.
—-
தேனருவி, மதுரை பாபாராஜ், வெளியிட்டவர்-பா. வசந்தா, சென்னை, விலை 60ரூ.
குழந்தைகளுக்காக எழுதப்பட்ட 30க்கும் மேற்பட்ட பாடல்களின் தொகுப்பு. ஒவ்வொரு பாட்டும் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் சிந்ததிக்கத் தூண்டுவதாக அமைந்து இருக்கிறது. விபத்தில்லா தீபாவளி, முயன்றால் முடியும், இந்தியா வல்லரசாகும், ஓடி விளையாடு தாத்தா, நேர்மைக்கு பரிசு போன்றைவை ரசிக்கும்படியானவை. நன்றி: தினத்தந்தி.
—-
பல்கலைச் செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மா.ரா. இளங்கோவன், அருள் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-296-2.html தமிழுக்கு அருந்தொண்டாற்றிய சான்றோர்களில் முக்கியமானவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர். சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான இந்திய மொழிகளையும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி முதலிய அந்நிய மொழிகளையும்(மொத்தம் 18 மொழிகள்) கற்றுத் தேர்ந்து பன்மொழிப்புலவர் என்று புகழ் பெற்றவர். தமிழின் பெருமையை விளக்கி, ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை எழுதி, மேல்நாட்டில் தமிழின் பெருமையைப் பரவச் செய்தவர். அவர் பற்றி தலைவர்களும், தமிழறிஞர்களும், புலவர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ. ஒரு திறனாய்வு. இந்த நூலின் தொகுப்பாசிரியர் மா.ரா. இளங்கோவனின் பணி பாராட்டுக்கு உரியது. நன்றி: தினத்தந்தி.