பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை
பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை ஐக்கிய அரபு அமீரகம், திருச்சி, விலை 500ரூ.
லட்சத்திற்கும் மேற்பட்ட தூதர்களை இறைவன் இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான். அவர்களில் நபிகள் நாயம் (ஸல்) அவர்களே இறுதித் தூதர் ஆவார். அவரின் வரவே இந்தப் பிரபஞ்சத்திற்குக் கிடைத்த மாபெரும் அருட்கொடை. அத்தகைய பெருமை பெற்ற பெருமானாரின் வரலாறு மிகப் புனிதமானது. முன்மாதிரியானது. நற்குணங்களின் தாயகம், நபிகள் நாயகம் என்று போற்றப்படும் நபிகளாரின் உயர்ந்த பண்புகளை, போதனைகளை, வியத்தகு சாதனைகளை விளக்கி 41 தலைப்புகளில் சான்றோர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.இதை அதிரை எஸ். ஷர்புதீன், ஏ.என்.எம்,முகம்மது யூசுப், ஆலிம் புலவர் எஸ். ஹுசைன் முக்கம்மது மன்பயீ ஆகியோர் தொகுத்துள்ளனர். கட்டுரைகளின் தொகுப்பு என்றாலும் ஒரு காவியமாக காட்சியளிக்கிறது. அட்டையும், அச்சும் அழகு. நன்றி: தினத்தந்தி.
—-
சிந்தனையும் வெற்றியும் இரு தண்டவாளங்கள், ஜே.வின் சென்ட், ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக யோசனைகளைக் கூறும் நூல். வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம் பெற்றிருபப்து கூடுதல் சிறப்பு. நன்றி: தினத்தந்தி.
—-
கதை எழுதுவது எப்படி, சிகார் பூங்குன்றன், சுபிக்சாவின் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 50ரூ. பகை வென்ற காதல், வெளுத்ததெல்லாம் பால் அல்ல போன்ற 10 தலைப்புகளில் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி