மெய்நிகரி
மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
கபிலன் வைரமுத்து எழுதிய நாவல். தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி முதன்முறையாக எழுதப்பட்ட நாவல் இது. காட்சி ஊடகக் கல்வி பயின்ற டெரன்ஸ்பால், மாடப்புறா தொலைக்காட்சியில் பணியாற்றுகிறான். அவனது குரலாக நினைவுகள் விரிகின்றன. அதில் கதை நகர்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாக இந்த நாவல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பும், உற்சாகமும் இறுதிவரை தொடர்கிறது. வித்தியாசமான நாவல். இது நம் இதயத்தைக் கொள்ளை கொள்வது உறுதி. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
சேற்றில் பிறந்த செந்தாமரை நீ, சண்முக சுப்பிரமணியன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 70ரூ.
நேரில் பார்த்த கேட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் தன்னுடைய கற்பனையை கலந்து எழுதியுள்ளார். சிலரது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும், அவர்கள் அடைந்த பட்டறிவும் படிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.