சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு
சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக சட்ட சபையில் காரசாரமான விவாதம் நடந்தது. அதை எழுத்தாளர், கே. ஜீவபாரதி வரிக்கு வரி தொகுத்து தந்துள்ளார். தமிழக அரசியலில், முக்கியமான ஒரு சம்பவத்தை முழுமையாக அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். நூலின் விலை 120ரூ. தேவர் பற்றி ஜீவபாரதி எழுதிய கீழ்க்கண்ட நூல்களையும், சுவாமிமலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேர்தல் மேடைகளில் பசும் பொன் தேவர் விலை 50ரூ. பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும் விலை 80ரூ.பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்டுகளும் விலை 80ரூ. நன்றி: தினத்தந்தி.
—-
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், துரத்தும் துரோகம், ஜேம் ஹட்லி சேஸ், தமிழில் அகிலன் – கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
பிரபல ஆங்கில நாவல் ஆசிரியர் ஜேம்ஸ் ஹாட்லி சேசின் ஏன் ஏஸ் அப் மை ஸ்லீவ் என்ற திரில்லர், துரத்தும் துரோகம் என்ற பெயரில் தமிழ் வடிவம் எடுத்து இருக்கிறது. ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களின் அனைத்து மசாலா அம்சங்களும் நிறைந்து இருப்பதாலும், மூலக்கதையைப் படிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் வகையிலான சரளமான மொழி பெயர்ப்பு காரணமாகவும் படிக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. நன்றி: தினத்தந்தி.