மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள்

மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள், டேவிட் ரிகோ, தமிழில் அகிலன் கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 248, விலை 150ரூ. நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில், 1. எல்லாமே மாறுகின்றன, முடிவடைகின்றன. 2. எல்லாமே நினைக்கிறபடி நடப்பதில்லை. 3. வாழ்க்கை எப்போதும் நியாயமாய் இருப்பதில்லை. 4. வலி என்பது வாழ்வின் அங்கம். 5. மனிதர்கள் எப்போதும் அன்பாகவும், விசுவாசமாகவும் நடப்பதில்லை என்ற இந்த ஐந்தும் சவாலாகவே இருக்கின்றன. இந்த விஷயங்கள் […]

Read more

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு

சட்டப்பேரவைவில் தேவர் பற்றிய சதி வழக்கு, கே. ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அன்றைய ராமநாதரம் மாவட்டத்தில் இரு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரங்கள் வெடித்தன. இமானுவேல் என்ற அரிஜன தலைவர் கொல்லப்பட்டதையொட்டி, பாவர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (வழக்கு விசாரணை முடிவில் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) கலவரங்கள் பற்றியும், முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டது பற்றியும், 1957 அக்டோபர் இறுதியில் தமிழக […]

Read more

பாமரன் பார்வையில் கம்பர்

பாமரன் பார்வையில் கம்பர், அந்தமான் கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 268, விலை 110ரூ. பாமரரையும் கவர்ந்திழுக்கும் நூலின் தலைப்பு போலவே உள்ளிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் யாவரையும் படிக்கத் தூண்டும் வகை. காக்கா பிடிக்கலாமா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? மாத்தி யோசி மாமூ, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, முத்துக்குளிக்க வாரீயளா?, அடைந்தால் மஹாதேவன் இல்லையேல் மரணதேவன், என்னெக் கணக்குப் பண்னேண்டா, எப்படி இருந்த நான்…, கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும், மலரே குறிஞ்சி மலரே, பெண்டாட்டி ஊருக்குப் […]

Read more